இன்று காமதா ஏகாதசி இன்றைய நாளில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு எண்ணில் அடங்காத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்று நள்ளிரவு 12.30 மணி வரை ஏகாதசி திதி என்பது இருக்கிறது. அதனால் இன்று இரவு 12 மணிக்குள் நாம் ஒரு எளிமையான சூட்சம பெருமாள் வழிபாட்டை செய்வதன் மூலம் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அந்த பெருமாள் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் சேர ஏகாதசி பரிகாரம்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாகவும் பணக்கார கடவுளாகவும் திகழக்கூடியவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாளை அனுதினமும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அனுதினமும் வழிபாடு செய்ய இயலாவிட்டாலும் அவருக்குரிய திதியான ஏகாதசி திதி அன்று மட்டுமாவது அவரை நினைத்து விரதம் இருந்தோ அல்லது அசைவத்தை தவிர்த்தோ பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் அவரின் அருளால் நமக்கு செல்வ வளம் என்பது அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக இந்த பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு கோடி மடங்கு பலனை தரக்கூடியதாக திகழ்கிறது.
இன்றைய தினத்தில் இரவு 12 மணிக்குள் பெருமாளை நினைத்து இந்த ஒரு சூட்சமமான வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறுவதோடு நமக்கு எண்ணில் அடங்காத பலன்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரே ஒரு ஏலக்காய் வேண்டும். பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய விதைகள் தெரியாத நல்ல ஏலக்காயாக பார்த்து ஒரு ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்தை சுத்தமாக இருக்கக்கூடிய நபர்கள் தான் செய்ய வேண்டும். அதாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கும் நபர்கள் தான் செய்ய வேண்டும். ஒருவேளை அசைவம் சாப்பிட்டிருந்தால் திரும்பவும் குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் தீட்டு சமயத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பரிகாரத்தை வீட்டு பூஜையறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த திசையை பார்த்துக் கொண்டு வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
ஏலக்காயை உங்களுடைய வலது கையில் வைத்து ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை முழுமனதோடு பெருமாளை நினைத்துக் கொண்டு மனதார கூற வேண்டும். பிறகு பெருமாளுக்குரிய இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். ஒன்பது முறை கூறி முடித்த பிறகு அந்த ஏலக்காயை அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் கடன் பிரச்சினை என்பது தீரும். அடகு வைத்த நகை, இடம் போன்ற அனைத்தையும் திருப்புவதற்குரிய யோகம் உண்டாகும். மேலும் நம்முடைய அவசர தேவைகள் பூர்த்தெடுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
மந்திரம்
“ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ”
இதையும் படிக்கலாமே:பங்குனி உத்திரம் 2025
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக வழிபாட்டை முழுமனதோடு பெருமாளை நினைத்து செய்பவர்களுக்கு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்குரிய பண வரவு உண்டாகும் முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.