- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணவரவு அதிகரிக்க பஞ்சமி வழிபாடு

பணவரவு அதிகரிக்க பஞ்சமி வழிபாடு

- Advertisement -

வாராகி அன்னை வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதி தான் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இன்றைய காலக்கட்டத்தில் வாராகி அன்னையின் வழிபாடு பெருவாரியானவர்களால் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நாம் துன்பம் என்று நின்றவுடன் நம் கண்ணீரை துடைக்கும் தெய்வமாய் அன்னை இருப்பதே. அதுமட்டுமின்றி தன்னை நம்பியவர்களின் துயரை அவர்கள் சொல்லாமலே தாயைப் போல் தானே உணர்ந்து தீர்ப்பதிலும் அன்னை சிறந்தவர்.

அப்படியான அன்னையை இந்த பஞ்சமி திதியில் நாம் ஒரு சில முறைகளில் வழிபடும் பொழுது நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நிச்சயம் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையும் வாழலாம். அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் முன் பார்க்கலாம்.

- Advertisement -

கடன் தீர்ந்து பணம் சேர பஞ்சமி வழிபாடு

இந்த வளர்பிறை பஞ்சமையானது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் வைகாசி மாதமே வழிபாட்டிற்குரிய மாதம் அந்த மாதத்தில் வரக் கூடிய வளர்பிறை திதி மிகவும் விசேஷம் இத்துடன் அன்னைக்கு உகந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் இந்த திதி வந்திருப்பது மேலும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இந்த நாளில் அன்னையை வழிபாடு செய்பவர்கள் எப்பொழுதும் போல செய்யலாம். இந்த திதியானது இன்று மாலை 7 மணிக்கு மேல் துவங்கி நாளை மாலை 7 மணி வரை உள்ளது. இந்த வழிபாட்டை மாலை செய்பவர்கள் 7 மணிக்கு பிறகும் காலை செய்பவர்கள். பிரம்ம முகூர்த்த நேரத்திலும் செய்யலாம். இந்த இரண்டு நேரத்திலும் செய்ய முடியாதவர்கள் நாளை மாலை 7 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். அதன் பிறகு சஷ்டி திதி துவங்கி விடுகிறது.

- Advertisement -

அப்படி வாராகி அன்னையை வணங்கும் போது அவருக்கே உரிய அனைத்து வழிபாடுகளையும் செய்த பிறகு ஒரு அகல் விளக்கைத் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஏலக்காய் மூன்று கிராம்பு கொஞ்சம் சோம்பு இதற்கு மேல் ஒரு துண்டு பச்சை கற்பூரம் வைக்க வேண்டும். இவையெல்லாம் வைத்த பிறகு அதன் மேல் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள்.

இதில் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்துமே பணத்தை ஈர்த்து தரக்கூடியவை அது மட்டும் வந்து மகாலட்சுமி தாயார் குபேரர் என அனைத்து செல்வாதிபதி தெய்வங்களுக்கும் உகந்த பொருட்கள். இந்தப் பொருட்களை வாராகி அன்னைக்கு முன்வைத்து பஞ்சமி திதியில் வழிபடும் பொழுது நம்முடைய கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த அகல் விளக்கை நாம் எடுக்கக் கூடாது அப்படியே பூஜை அறையில் இருக்க வேண்டும் இதை இந்த அகல் விளக்கை நாம் எடுக்கக் கூடாது. அப்படியே பூஜை அறையில் இருக்க வேண்டும். தினந்தோறும் விளக்கு ஏற்றும் பொழுது வாராகி அன்னை மனதார நினைத்துக் கொண்டு இதற்கும் ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்து வாருங்கள். இதனால் வீட்டில் செல்வநிலை உயர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பொருட்கள் ஒரு மாதம் வரை இருக்கலாம். அடுத்து வளர்பிறை தஞ்சமி திதியில் இந்த வழிபாடு செய்யும் பொழுது பழையவனற்ற எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். புதிய பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் அதை நாணயத்தை சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: திங்கள் கிழமை பிள்ளையார் பரிகாரம்

பணம் சேர அன்னையும் வணங்கும் இந்த வழிபாட்டின் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு அன்னையின் ஆசியை முழுவதுமாக பெறுங்கள்.

சற்று முன்