பர்ஸ், பணம் வைக்கும் இடத்தில் இந்த 5 ரூபாய் மட்டும் வைத்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் தெரியுமா?

5-rupee-lakshmi

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் நிலைப்பது இல்லையே என்று புலம்புபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். வரவுக்கு மீறிய செலவு, மாத கடைசியில் ஏமாற்றத்தை அளிக்கும். மகாலட்சுமி ஆனவள் எல்லோரிடமும் நிரந்தரமாக தங்குவதில்லை. கைக்கு கை மாறிக் கொண்டே தான் இருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறது. சூரிய, சந்திரனை வைத்தே பூமியில் அத்தனை விஷயங்களும் இயங்குகின்றன.

chandra bagawan

ஒருவருடைய திடீர் ராஜ யோகம் எனப்படும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் சந்திரனால் உருவாக்கக் கூடியவை. சந்திர பகவானின் ஆசிர்வாதம் பெற, பவுர்ணமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது. அதை எப்படி செய்வது? அதனால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

திடீர் இராஜயோகம் என்பதை அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம். இது எப்பொழுது யாருக்கு வரும் என்பது யாருக்குமே தெரியாது. சுய ஜாதகத்தின் அடிப்படையில் திடீர் ராஜ யோகம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், அவைகள் நடக்குமா? என்பது கேள்விக்குரிய விஷயம் தான். ஆனால் சந்திரனின் அருள் பெற பௌர்ணமி அன்று இந்த வழிபாடு மேற்கொள்ளுங்கள். பணம் பல வழிகளில் உங்களைத் தேடி தானாகவே வரும். அத்தகைய பரிகாரத்தை பற்றிய தகவல்களை இனி பார்ப்போம்.

pournami

பவுர்ணமி அன்று மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திர பிம்பம் முழுமையாக தெரியும் நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பரிசுத்தமான வெள்ளை பேப்பரில் நான்கு புறமும் மஞ்சள் இட்டுக் கொள்ளுங்கள். பின்னர் சந்திர காயத்ரி மந்திரம் உச்சரித்து அந்த பேப்பரில் எழுதுங்கள். நடுவில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அதற்கு இடையே மஞ்சள், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் இந்த பேப்பரை வைத்து, அதன் மேல் 5 ரூபாய் நாணயத்தை காணிக்கையாக சமர்ப்பியுங்கள். தாம்பூலத்தை சுற்றிலும் அலங்காரம் செய்ய உதிரிப் பூக்களை பயன்படுத்துங்கள். உங்களுடைய மன கவலைகள், சங்கடங்கள் தீர சந்திர பகவானிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இதை பூஜை அறையில் செய்வது மிகவும் நல்லது. உழைக்கின்ற பணம் வீணாவதை தடுக்கவும், மென்மேலும் வருமானம் பெருகவும் வழிபடுவதாக மனமுருகி சந்திர பகவானை வேண்டுங்கள். பின்னர் அதனை அப்படியே விட்டு விட்டு மறுநாள் காலையில் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

5-rupee-coin

இதனை உங்களுடைய பர்ஸ் அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் போதும். மந்திரம் எழுதிய அந்த பேப்பரை மடித்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு பின்னால் வைத்துக் கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்யும் பொழுது நிவேதனமாக கற்கண்டு, அல்லது வெண்மை நிற பட்சணங்கள் செய்து படைத்து வழிபடுவது மிகவும் நல்லது. இவ்வாறு தொடர்ந்து 9 பவுர்ணமி அன்று செய்து வந்தால் பண தடை நீங்கும் என்பது ஐதீகம். கையில் எப்பொழுதும் சரளமாக பணம் புரண்டு கொண்டே இருக்கும். நீங்களும் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில் மனநிம்மதியே இல்லையா? வீடும் கோவிலாக மாறும். கோவிலுக்கு சென்றால் கிடைக்கக்கூடிய மனநிம்மதி, உங்களுடைய வீட்டில் இருந்தாலும் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.