சமையலறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்களை மட்டும் ஒன்றாக வைத்து தான் பாருங்களேன்! பின்பு உங்கள் வீட்டில் பணமழை கொட்டுவதை அந்த ஆண்டவனே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

mahalashmi

ஒருவருடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் வருவதற்கு காரணமாக இருப்பது இந்த நவகிரகங்கள் தான். நவகிரகங்களின் ஆதிக்கம் நம்முடைய ஜாதக கட்டத்தில் சரியாக இல்லை என்றால், கட்டாயமாக அந்தந்த காலகட்டத்தில் வரக்கூடிய கஷ்டங்களை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். பாவங்களை செய்து விட்டு, அந்த ஆண்டவனிடம் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் கிரகங்கள் தங்களுடைய வேலையை கட்டாயம் செய்யும். நம்மை உற்று நோக்கி கொண்டிருக்கும் இந்த கிரகங்களிடம் இருந்தும், கிரகங்கள் கொடுக்கக்கூடிய தண்டனையிலிருந்தும் தப்பிக்கவே முடியாது.

navagragam

நம்மை யாரும் பார்க்கவில்லை! நாம் செய்யும் தவறு, நாம் செய்யும் பாவம் யார் கண்களுக்கும் தெரியாது, என்று தைரியமாக இனி யாரும் எந்தக் கெடுதலையும் அடுத்தவர்களுக்கு செய்யாதீர்கள். இந்த பிரபஞ்சத்தின் கண்கள், நவகிரகத்தின் கண்கள் நம்மை ஒவ்வொரு நொடியும் உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றது. முன்பெல்லாம் இந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு, அடுத்த ஜென்மத்தில் தான் தண்டனை என்று சொல்லுவார்கள். இப்போது கலியுகம் நடந்து கொண்டிருப்பதால், அந்தந்த ஜென்மத்தில் அவரவர் செய்த பாவத்திற்கான தண்டனையை, அந்தந்த ஜென்மத்திலேயே அனுபவித்து விடுகிறார்கள்.

சரி, இந்த நவ கிரகங்களில், மற்ற கிரகங்களின் தன்மை கொஞ்சம் கடுமையாக இருந்தாலும், மற்ற கிரகங்களை நம்முடைய வசப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் கொடுக்கக் கூடிய இந்த சுக்கிர பகவானை மட்டும் நம்மால் சுலபமாக வசியப்படுத்தி விட முடியும். அதாவது சுக்கிர பகவானின் அருளை முழுமையாகப் பெறுவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. ஏனென்றால் சுக்கிரபகவான் சாதுவான குணம் கொண்டவர்.

சுக்கிர பகவானினை நம் வசப்படுத்திக் கொள்ள, அந்தப் பணம் காசு நம் வீடு தேடி வர, நாம் செய்ய வேண்டிய சிறிய தாந்திரிக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலுக்குள் ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மொச்சை, ஒரு கைப்பிடி அளவு சர்க்கரை, இரண்டையும் போட்டு நன்றாக குலுக்கி விட்டு விடுங்கள். இறுதியாக அதன் மேல் 2 ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக கலந்து மூடி போட்டு வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

வாரம் ஒரு நாள் இதன் உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து பசு மாட்டிற்கு கொடுத்து விட்டு, பாட்டிலை கழுவி மீண்டும் புதிய பொருட்களை வைக்க வேண்டும். இப்படி செய்து வர சுக்கிர பகவான் மனம் குளிர்ந்து விவரங்களை நமக்கு அள்ளிக் கொடுத்து விடுவார்.

mochai

சமையலறையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் கல் உப்பு, சர்க்கரை, பச்சரிசி இந்த மூன்று பொருட்களையும் ஒவ்வொரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூன்றையும் ஒன்றாக வைக்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் இந்த பொருட்களை உள்ளே போட்டு வைத்திருப்பது வெளியே நன்றாக தெரிய வேண்டும்.

sugar

இந்த மூன்று பொருட்களையும் எப்போதும் போல எடுத்து நாம் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீண்டும் அந்த பொருட்களை அந்த கண்ணாடி பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொடுங்கள். வெள்ளை நிறத்தில் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் எல்லாம் அந்த சுக்கிர பகவானுக்கு உரியது. குறிப்பாக சர்க்கரை பச்சரிசி உப்பு இந்த பொருட்களுக்கு சுக்கிர பகவான் சீக்கிரமே வசியம் ஆகிவிடுவார். இனிப்பான பொருட்களும் சுக்கிர பகவானுக்கு சொந்தம் என்பதால் தேனை இந்த பரிகாரத்தில் சேர்க்கிறோம்.

honey 1

சமையலறையில் தேன், சர்க்கரை, உப்பு, பச்சரிசி, மொச்சை இந்ந 5 பொருட்களும் எப்போதுமே நிறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த 5 பொருட்களும் வீட்டில் நிறைவாக இருந்தால் வீட்டில் வறுமை நெருங்காது என்பதும் உண்மையான ஒரு விஷயம்தான். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைத்துவிடும். நிச்சயம் பணவரவு பல மடங்கு அதிகரிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.