தன ஆகர்ஷனத்தை தடையில்லாமல் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் தனியா! 10 தனியா விதைகள் போதும். சுலபமாக 10 கோடிக்கு அதிபராகிவிடலாம்.

thaniya

இன்றைய சூழ்நிலையில் 10 கோடிக்கு அதிபர் ஆகின்றோமோ இல்லையோ, பத்து ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும், என்ற நிலைமைதான் நமக்கு நிலவி வருகின்றது. நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் சரிவர அமையவில்லை. வியாபாரம் இல்லை. தொழில் இல்லை. செய்யும் வேலையில் வருமானம் இல்லை. இந்த சூழ்நிலையில் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு தேவையான அளவிற்காவது நம் கையில் பணப்புழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி? என்பதை தேடிக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள எந்த வழியில் பணத்தை சம்பாதிக்க முடியுமோ, அந்த வழியை நேர்மையாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதுவே முதல் வழி.

thaniya2

அடுத்தபடியாக, ஆன்மீக ரீதியாக பரிகாரங்களின் வழியில், உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டம் தீர, கடன் பிரச்சனை தீர, தனியா விதைகளை வைத்து என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லார் வீடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த தனியா விதைகளுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது.

நிறைய தனியா விதைகள் கூட வேண்டாம். பத்து தனியா விதைகளை உங்கள் உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளை மூடிக்கொண்டு, குலதெய்வத்தை வேண்டி மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை தீர்ந்து வருமானம் அதிகரித்தால் இந்த தனியா விதைகளை தானம் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

red-cloth

பிரார்த்தனையை முடித்துவிட்டு உள்ளங்கைகளில் இருக்கும் தனியா விதைகளை ஒரு சிவப்புத் துணியில் முடிச்சுக் கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். நீங்கள் இந்த முடிச்சை கட்டுவதற்கு முன்பு, வைத்த வேண்டுதல் நிறைவேறிய உடன், தனியா விதைகளை புதன்கிழமை அன்று தானம் கொடுக்க வேண்டும். யாருக்கு தானம் கொடுப்பது? இயலாதவர்களுக்கு, அனாதை ஆசிரமங்களுக்கு, அப்படி இல்லை என்றால் கோவிலில் இருக்கும் குருக்களுக்கு உங்களால் எவ்வளவு தனியா விதைகளை வாங்கி தர முடியுமோ அந்த அளவிற்கு வாங்கி புதன்கிழமை அன்று தானம் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து 3 வாரங்கள் ஒரு கிலோ தனியா விதைகளை வாங்கி தானமாக கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் ஒரே ஒரு முறை ஒரு கிலோ தனியா விதைகளை வாங்கி தானமாக கொடுத்து விடுங்கள். அது உங்களுடைய வசதியை பொருத்தது. ஆக மொத்தத்தில் மேற்சொன்ன வேண்டுதலை வைக்கும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கக்கூடிய பலவகைப்பட்ட பண பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் விடிவுகாலம் கிடைக்கும்.

thaniya1

அந்த சிவப்பு முடிச்சில் இருக்கும் தனியாவை என்ன செய்வது. உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அந்த தனியாவை எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிடலாம். வெறும் பத்து தனியா விதைகள் தானே அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. பல பிரச்சனைகளுக்கு சீக்கிரமே விடிவு காலம் பிறக்க, மிக மிக சுலபமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.