பணம் சேர, ‘மகாலட்சுமி தேவியே’ நாம் எப்படி இருக்க வேண்டும்? என்று கூறுகிறார் தெரியுமா?

பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு பணம் என்பது எல்லாருடைய வாழ்க்கையில் பிரதானமாக இருந்து வருகிறது. பந்தம், பாசம் எல்லாம் பணம் இருந்தால் தான் நம்மை தேடி வருகிறது. நியாயம், அநியாயம் எல்லாவற்றையும் பணமே இன்று தீர்மானிக்கிறது. பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி. ஒரு ஆணிடம் பணம் சேர்வதற்கு அவன் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? அதே போல் ஒரு பெண்ணிடம் பணம் சேர்வதற்கு அவள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்று மகாலட்சுமி தேவியே கூறியதாக புராணங்கள் உள்ளது. அப்படி அவர் என்ன கூறுகிறார்? என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

dhanalakshmi

ஒரு பெண்ணிடம் பணம் சேர்வதற்கு அல்லது அவளிடம் பணம் தங்குவதற்கு அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் மகாலக்ஷ்மி தாய்.

1. பெண்ணானவள் எப்பொழுதும் மின்னும் வளையல்களை இரண்டு கைகள் முழுவதிலும் அணிந்து கொள்ள வேண்டுமாம்.

Gold

2. பெண்கள் பணத்தை வாங்குவதானாலும், மற்றவர்களுக்கு கொடுப்பது ஆனாலும் வலது கையால் தான் கொடுக்க வேண்டுமாம்.

- Advertisement -

3. அதே போல் சாப்பாடு பரிமாறும் பொழுதும் வலது கையால் தான் பரிமாற வேண்டும்.

eating-1

4. எந்த சூழ்நிலையிலும் பெண்கள் ஒற்றைக்காலில் நிற்க கூடாது என்கிறார் மகாலட்சுமி.

5. தாலிக்கயிற்றை திருமணமான பெண்கள் கோவிலில் அமர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டுமாம்.

mangalyam1

6. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் பெண்கள் மாங்கல்யதிற்கும், நெற்றியிலும் சேர்த்து இட்டுக் கொள்ள வேண்டுமாம்.

7. தாலி கட்டிய கணவனுக்கு கால்களை பிடித்து விடுவது பண சேர்க்கையை பெண்ணிடத்தில் அதிகரிக்க செய்யுமாம்.

vishnu-lakshmi

8. எப்பொழுதும் தூய, சுத்தமான ஆடையை மட்டுமே பெண் அணிந்து கொள்ள வேண்டுமாம்.

9. அதிர்ந்து நடப்பது, கத்தி பேசுவது போன்றவற்றை அனாவசியமாக செய்யாமலிருப்பது அதிக பணம் வர வழியாம்.

anger

10. காலையில் எழுந்ததும் தலை வாசலை தாண்டும் பொழுது நேற்றைக்கு உடுத்திய ஆடையை உடுத்தி இருக்கக் கூடாதாம். இதனால் பணம் தடைபடும்.

ஒரு ஆணிடம் பணம் சேர்வதற்கு அல்லது அவனிடம் பணம் தங்குவதற்கு அவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் மகாலக்ஷ்மி.

scolding-husband

1. ஒரு ஆண் என்பவன் முதலாவதாக பெண்களை கஷ்டப்படுத்தி அவர்களை அழ வைக்காமல் இருப்பதால் அவனிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.

2. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களிடம் சண்டை, சச்சரவில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லதாம்.

scolding-each-other

3. ஆண்கள் பகல் நேரத்தில் எப்பொழுதும் உறவு கொள்ளக் கூடாதாம். இல்லை என்றால் அவர்களிடம் பணம் சேர்வது தடைபடுமாம்.

4. திருமணமான ஆண்கள் மனைவிக்கு மல்லிகைப் பூ சூட்டினால் பணவரவு அதிகரிக்குமாம்.

malli-poo

5. மகவை சுமக்கும் பெண்களிடத்தில் கடிந்து கொள்ளாமல் அனுசரணையாக இருக்கும் ஆண்களிடத்தில் பணம் பெருகுமாம்.

6. வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வேண்டி வழிபடுவது நன்மைகளை வழங்கும்.

Mazaa during pregnancy

7. ஆண் ஆனவன் பணத்தை தன்னுடைய தொடை மற்றும் மார்பக பகுதிகளில் படும்படி வைத்திருக்க வேண்டுமாம்.

8. குளித்தவுடன் முதலில் முதுகை தான் அவன் துடைக்க வேண்டுமாம். இதனால் தரித்திரம் விலகி செல்வம் சேரும்.

bathing

9. சம்பாதித்த பணத்தில் ஒரு தொகையை அன்னதானம் செய்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

10. சுக்கிர ஓரையில் வீட்டிற்கு கல்லுப்பு வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் செல்வம் சேரும்.

salt

கடைசியாக ஆணோ? பெண்ணோ? அசுப வார்த்தைகளை அதாவது கெட்ட வார்த்தைகளை பேசினால் பணவரவு தடைபடும். பேச்சில் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள் இடத்தில் நிச்சயம் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பணத்தை ஈர்க்கும் ‘பச்சை கற்பூரம்’ இதையெல்லாம் கூட செய்யுமா? ஆச்சரியமா இருக்கே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.