- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேரும் யோகத்தை தரும் வளர்பிறை பிரதோஷம்

பணம் சேரும் யோகத்தை தரும் வளர்பிறை பிரதோஷம்

- Advertisement -

வளர்பிறை என்றாலே அது வளர்ந்து கொண்டே போகும் என்றும் தேய்பிறை என்றால் அது தேய்ந்து கொண்டே போகும் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஒரே திதி தான் வருகிறது. வளர்பிறையில் வரக்கூடிய திதியில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வளங்கள் அனைத்தும் வளரும். தேய்பிறையில் வரக்கூடிய திதியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும். இதுதான் நியதி. அந்த வகையில் பணம் நம்மிடம் வந்து சேர்ந்து கொண்டே இருப்பதற்கு வளர்பிறை பிரதோஷ நாளன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை பிரதோஷம் வழிபாடு

சிவபெருமானின் அருளைப் பெற வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவரும் கண்டிப்பான முறையில் பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். பலரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் விரதம் இருந்து வீட்டிலேயே பூஜை செய்வார்கள். இன்னும் சிலரோ விரதம் எதுவும் இருக்காமல் பூஜை மட்டும் செய்வார்கள் அல்லது அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு மட்டும் செல்வார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையில் பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைப்பார்கள். பூஜை எதுவும் செய்யாமல் ஆலயத்திற்கு செல்லாமல் விரதம் இருக்காமல் இந்த ஒரு வழிமுறையை மட்டும் பின்பற்றினாலே சிவ அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஜூலை மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை வளர்பிறை பிரதோஷம் வருகிறது. இந்த நாளில் நம்மால் இயலும் பட்சத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளையும் அபிஷேகத்திற்குரிய பூஜை பொருட்களையும் வாங்கித் தருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பூஜை செய்ய முடியவில்லை, விரதம் இருக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இந்த ஒரு வழிமுறையை மட்டும் பின்பற்றினால் போதும். பூஜை செய்த பலனை பெற முடியும். சிவ அருளையும் பெற முடியும்.

இதற்கு சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் இந்த வழிமுறையை நாம் பின்பற்ற வேண்டும். ஒருவேளை பிரதோஷ நேரத்தில் இதை செய்ய இயலவில்லை என்பவர்கள் இரவு 11 மணிக்குள் இதை நாம் செய்துவிடலாம். வடக்கு திசை பார்த்து ஏதாவது ஒரு விரிப்பை விரித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அமர்ந்து ஒரு நோட்டில் சிவபெருமானுடைய இந்த ஒரு மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும். எழுதத் தெரியாது என்பவர்கள் இதே மந்திரத்தை 108 முறை கூறினால் போதும். முழுமனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் சிவ அருள் கிடைக்கும். பூஜை செய்த பலனையும் பெறுவார்கள். பணம் வந்து சேரும் யோகமும் உண்டாகும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ பகவதே ருத்ராய நமோ நமஹ”

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இருக்கக்கூடாத பொருட்கள்

எளிமையான இந்த வழிமுறையை முழு மனதோடு சிவபெருமானை நினைத்து யார் ஒருவர் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் செய்கிறார்களோ அவர்களுக்கு சிவ அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு பணம் சேரும் யோகமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்