தினமும் வீட்டில் இப்படி ஒரு தீபம் ஏற்றி வைத்தால், பணம் தங்கும். வீண் விரையம் குறையும்.

mahalakshmi
- Advertisement -

வீட்டில் பணம் தங்குவதற்கும் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கும் ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக எத்தனையோ பரிகார வழிபாட்டு முறைகள் உள்ளது. அந்த வரிசையில் மிக மிக சுலபமான ஒரு தீப வழிபாட்டினை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் வீட்டில் தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் கட்டுக்கட்டாக பணம், தனம் தானியம் அனைத்தும் நிறைவாக கொட்டி இருக்க வேண்டும் என்ற ஆசை தான் உள்ளது. ஆனால் எல்லோராலும் இப்படி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து விட முடியாது. தேவைக்கேற்ற பணம் வருவதும் போவதுமாக இருந்தாலே போதும். வாழ்க்கையில் நிம்மதி கிடைத்து விடும். ஆக பேராசை படாமல் இருக்கின்ற வாழ்வை எப்படி சிறப்பாக்கி கொள்ளலாம் என்று நாம் முதலில் சிந்திக்க வேண்டும். இந்த ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவுக்கு செல்வோம்.

vetrilai-deepam-lakshmi

இந்த தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். பச்சரிசி நெல் ஒரு கைப்பிடி அளவு, மண் அகல் விளக்கு ஒன்று, மஞ்சள் விளக்கு திரி ஒன்று, பச்சை விளக்கு திரி ஒன்று, வெள்ளி நாணயம் ஒன்று, தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய், பச்சைக் கற்பூரம் சிறிய துண்டு அவ்வளவுதான்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு சிறிய தட்டில் பச்சரிசி நெல்லைப் பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைக்கவேண்டும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய்க்குள் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை நசுக்கிப் போட்டு கொள்ளுங்கள். அடுத்தபடியாக தயாராக இருக்கும் மஞ்சள் திரியையும், பச்சை திரியையும் ஒன்றாக இணைத்து திரித்து விளக்கில் தீபம் ஏற்றுவதற்காக போட்டுக் கொள்ளுங்கள்.

cash-mahalakshmi

அடுத்தபடியாக வெள்ளி நாணயத்தை விளக்குகள் போட்டுவிட வேண்டும். (மகாலட்சுமி உருவம் பதித்த வெள்ளி நாணயம் 100 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது.) அதன் பின்பு விளக்கு அலங்காரம் செய்ய வாசனை நிறைந்த பூ ஒன்று. இப்போது இந்த விளக்கு தீபம் ஏற்றுவதற்கு தயாராக உள்ளது. உங்களுடைய மனதிற்குள் ‘உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும். வீண் விரையம் குறைய வேண்டும்’ என்று மகாலட்சுமியையும் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அடுத்து இந்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து முடிந்தால் 108 மகாலட்சுமி போட்டிகளை உச்சரிக்கலாம். முடியாதவர்கள் ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

mahalashmi3

தினமும் இந்த தீபம் உங்கள் வீட்டு பூஜை அறையில் வெறும் ஒரு மணி நேரம் எரிந்தால் கூட போதும். வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் நீக்கப்படும். வீண் விரையங்கள் குறைக்கப்படும். வீட்டில் பணம் சிறிதளவாவது தங்கும். (தட்டில் கொட்டி வைத்திருக்கும் பச்சரிசி நெல்லை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். பனியன் நெல்லை காக்கை குருவிகளுக்கு இணையாக போடலாம்.) நம்பிக்கையோடு இந்த சுலபமான தீபத்தை அனைவரும் ஏற்றி, நல்ல பலனை பெற வேண்டும் என்று அந்த மகாலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -