வெற்றிலையில் இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து, இப்படி வைத்து பாருங்கள். வீட்டில் நீண்ட நாட்களாக இருந்து வந்த வறுமை நீங்கி, வராத பணம் கூட உங்கள் கைக்கு வந்து சேரும். பண கஷ்டம் உடனே தீரும்.

vetrilai-cash

யாருக்குத்தான் வீட்டில் பணம் கஷ்டம் இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப, அவரவருடைய வீட்டில் பண கஷ்டம் இருந்துதான் வருகிறது. இருப்பினும் அந்த கஷ்டத்தை சமாளிக்கக் கூடிய மன தைரியம், மன உறுதி நமக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கஷ்டத்தில் இருந்து நாம் வெளிவர முடியும். பண கஷ்டங்களை போக்குவதற்கு ஆன்மீக ரீதியாகவும் தாந்திரீக ரீதியாகவும் பல வகைகளில், பல பரிகாரங்கள் இருந்தாலும், அந்த பரிகாரங்களில் சிலது, சிலபேருக்கு உடனே பலனை தரும். சில பேருக்கு அந்த பரிகாரங்கள் பலனளிக்க கொஞ்சம் அதிக நாட்கள் எடுக்கத்தான் செய்யும்.

cash

இந்த வித்தியாசங்கள் எதனால்? சில பேருக்கு அவர்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டம் மிக வலிமையானதாக இருக்கும். எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் அது, அவர்களுக்குள் சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும். சில பேருக்கு அந்த ஆரா வட்டம் பலவீனமாக இருந்தால், பரிகாரங்கள் வெளிப்படுத்தும் நேர்மறை ஆற்றலை அவ்வளவு சீக்கிரத்தில், அவர்களால் கிரகித்துக் கொள்ள முடியாது. இதனால் தான் மனதை அமைதிப்படுத்தி, ஆராவை வலுவாக்கி கொள்வதற்காக தியானத்தில் ஈடுபடுவார்கள். தியானம் செய்வது நம் மனதையும் உறுதிப்படுத்தும். நம்மை சுற்றியிருக்கும் ஆராவையும் உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுக்கும் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலன் அளிக்கவில்லை என்றால், உங்களுடைய ஆரா வட்டத்தை உறுதி செய்து கொள்ள தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பத்து நிமிடங்களாவது மனதை அமைதிப்படுத்தி, தியானம் செய்ய பழகி வாருங்கள். பரிகாரங்கள் உடனடியாக பலன் அளிப்பதற்கு தியானம், யோகா போன்ற பயிற்சிகளும் நமக்கு அவசியம் தேவை.

cash-pachai-karpooram

சரி, பணத்தை சேமிப்பதற்கான ஒரு பரிகாரத்தை இப்போது பார்த்துவிடுவோம். பொதுவாகவே மகாலட்சுமியின் அம்சம் கொண்டது வெற்றிலை. வெற்றியின் அம்சத்தை முழுமையாக தன்னுள் அடக்கி வைத்துள்ள பெருமையும் இந்த வெற்றிலைக்கு உண்டு. இந்த வெற்றிலையோடு கஸ்தூரி மஞ்சள், கரு மஞ்சள், பட்டை, இலவங்கம், பச்சை கற்பூரம் இந்த ஐந்து பொருட்களையும் சேர்த்து வைக்கும் போது நமக்கு பண ஈர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

- Advertisement -

அதாவது சுத்தமான வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சள், கரு மஞ்சள் இரண்டையும் தண்ணீரில் குழைத்து, அந்த வெற்றிலையின் மேல் லேசாக தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த வெற்றிலைக்கு மேல் ஒரு பட்டை, ஒரு லவங்கம், ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் இந்த 3 பொருட்களையும் வைத்து வெற்றிலையை அப்படியே சுருட்டி ஒரு நூல் போல கட்டி பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடலாம்.

karu-manjal1

இப்படியாக இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து உங்களுடைய பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்கு இந்த வெற்றிலை வாடாமல் இருக்கும். மூன்று நாட்களுக்குப் பின்பு வெற்றிலையை மட்டும் மாற்றிவிட்டு, வெற்றிலையில் மீண்டும் கஸ்தூரி மஞ்சளையும், கரு மஞ்சள் தடவி, இதே பட்டை லவங்கம் பச்சை கற்பூரத்தை வைத்து மீண்டும் பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். பச்சை கற்பூரம் கரைந்து விட்டால் புதியதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

kasthuri-manjal

இப்படியாக தொடர்ந்து பணப்பெட்டியில் இந்த பொருட்கள் இருந்து வந்தால் மகாலட்சுமியின் அம்சம் நிரந்தரமாக உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களுடைய வீடு வறுமையில் இருந்தாலும், அந்த வறுமையைப் போக்கக் கூடிய சக்தி, பணத்தை ஈர்த்துக் கொண்டு வந்து உங்களுடைய கையில் கொடுக்கக் கூடிய சக்தி இந்த வெற்றிலையில் இருக்கும் அனைத்து பொருட்களிலும் உண்டு என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.