பண தேவைக்காக, எந்த காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களிடம் கைநீட்டிம் சூழ்நிலை எனக்கு வந்து விடக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு செல்வ வளத்தில் என்றும் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் பெருமாளே, அதற்கு எனக்கு ஒரு வழியை காட்டு என்று மனமுருக பிரார்த்தனை செய்து இந்த பதிவிற்குள் பயணம் செய்யுங்கள் நல்லதே நடக்கும். கை நிறைய செல்வ கடாட்சம் நிறைந்திருக்க, இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய பெருமாள் வழிபாடு என்ன ஆன்மிகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
புரட்டாசி மாதம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
முதல் விஷயம் புரட்டாசி மாதத்தில் நீங்கள் செய்யும் தானம் தர்மம் உங்களுக்கு ஆயிரம் மடங்காக திருப்பி கிடைக்கும். நீங்கள் 10 ரூபாய்க்கு தானம் கொடுத்தீர்கள் என்றால், 100 ரூபாய்க்கு உங்களுக்கு வருமானம் பெருகும் என்பது தான் நம்பிக்கை. புண்ணியம் சேர்க்கும் மாதம் புரட்டாசி மாதம் என்று சொல்லுவார்கள். உங்களால் இயன்ற அளவு இந்த புரட்டாசி மாதத்தில் தான தர்மங்களை செய்து புண்ணியத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்த மாதம் தெய்வத்திற்கு உண்டான மாதம், பித்ருக்களுக்கு உண்டான மாதம், தேவர்களுக்கும் உண்டான மாதம். அப்போது இந்த மாதத்தின் மகத்துவத்தை வார்த்தையால் நம்மால் சொல்லிவிட முடியுமா.
தெய்வ கடன், பித்ரு கடன், தேவர்கள் கடன். மனிதருக்கு இருக்கக்கூடிய இந்த மூன்று கடனிலிருந்தும் விடுபட வேண்டும் என்றால் புரட்டாசி மாதம் இறைவழிபாடு செய்வதும், தான தர்மம் செய்வதும் தான் ஒரே வழி. முதலில் இந்த மாதத்தில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. தான தர்ம காரியங்கள் செய்வது சிறப்பு. பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பு . மூன்று விஷயங்களையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பெருமாளை வசியம் செய்து பொருளாதாரத்தில் எப்படி முன்னேறலாம் என்ற பரிகாரத்தை பார்த்து விடுவோம்.
பணம் தரும் பெருமாள் வழிபாடு
நம்ம எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் பெருமாளின் திரு உருவப்படம் இருக்கும். அந்தப் அந்த வெங்கடாஜலபதியை தினம் தோறும் பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்தாலே போதும். எப்படி வழிபடுவது. பெருமாளுக்கு தினமும் துளசி இலைகளை சாற்றுங்கள். சின்ன வெள்ளி கிண்ணத்தில் கொஞ்சமாக டைமண்ட் கற்கண்டுகளை போட்டு நெய்வேத்தியம் செய்யுங்கள்.
வெள்ளிக்கிண்ணம் இல்லாதவர்கள் சாதாரண தட்டிலும் பெருமாளுக்கு டைமண்ட் கற்கண்டுகளை வைக்கலாம். பஞ்ச தீர்த்தத்தில் கொஞ்சம் பச்சை கற்பூரம், இரண்டு துளசி இலை போட்டு பெருமாள் முன்பு வையுங்கள். கொஞ்சமாக சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரம் போட்டு பன்னீர் ஊற்றி கலந்து அந்த கலவையை எடுத்து பெருமாள் தாடையில் தடவி விட வேண்டும்.
உதட்டுக்கு கீழே உள்ள பகுதி தாடை என்று சொல்வார்கள் அல்லவா. திருப்பதி பெருமாளுக்கும் அந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் பச்சை கற்பூரம் வைத்திருப்பார்கள். கட்டாயம் பெருமாளுக்கு இந்த மாதம் யாரெல்லாம் பச்சை கற்பூரத்தை சூட்டிவிடுகிறீர்களோ, அவர்கள் வீட்டில் எல்லாம் பணக்கஷ்டம் என்பதே தாங்காது. இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் இதை உங்களுடைய வீட்டில் சோதித்து கூட பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் புரட்டாசி பரிகாரம்
இறுதியாக தீப தூப ஆராதனையை காண்பித்து பெருமாளை சரணாகதையோடு வழிபாடு செய்யுங்கள். ஆயிசிக்கும் பணத்திற்காக யாரிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வராது. அதை பெருமாள் பார்த்துக் கொள்வார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.