சம்பாதித்த பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கவும், வாங்கிய கடனை விரைவில் அடைக்கவும், இந்த ஒரு பொருளை முதலில் வீட்டிற்க்கு வாங்கி விடுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீட்டிற்கு வருவதற்கு உள்ளேயே செலவழிந்து விடுகிறது. என்ன தான் நாம் மாதம் வரவு செலவு கணக்கு பார்த்து எல்லாம் சரியாக செய்கிறோம் என்று நினைத்து செய்தாலும் கூட, நம்மால் பணத்தை மிச்ச படுத்தி சேமிக்க முடியவில்லை. சரி பணத்தை சேமிக்க தான் முடியவில்லை கடனாவது வாங்காமல் இருக்கிறோமோ அதுவும் கிடையாது. எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு சிறு தொகையாவது கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமல் படும்பாடு அதைவிட துயரமானது. இந்த நிலை மாற நாம் என்ன செய்வது என்று புலம்பி வாழ்வதே பலருக்கு சகஜமான ஒன்றாகி விட்டது.

இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஆன்மீகத்தில் சில வழிமுறைகளை நமக்கு கூறியிருக்கிறார்கள். அதாவது சம்பளம் வாங்கினாலும் சரி அல்லது தொழிலோ, வியாபாரத்திலோ வரும் முதல் வருமானமாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் கடன் வாங்கினாலும் சரி முதலில் அதில் ஒரு சில பொருட்களை வாங்கினால் வீட்டில் வருமானம் பெருகும். உப்பு வாங்கி வைத்தால் செல்வம் சேரும் என்று ஒரு தாந்த்ரீகம் இருப்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. உப்பைத் தவிர வேறு எந்தெந்த பொருளை வாங்கினால் அதிக செலவாகாமல் இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு உபயோகமான பதிவு தான் இது.

- Advertisement -

இப்படி நீங்கள் இரவும் பகலும் பாடுபட்டு சம்பாதித்த பணம் உங்கள் கையிலே தங்க நீங்கள் வாங்க வேண்டிய அந்த ஒரு பொருள் துவாரம் பருப்பு. ஆம் நாம் சாம்பார் வைக்க பயன்படுத்தும் இந்த துவரம் பருப்பை தான் நாம் முதன் முதலில் வீட்டிற்கு வாங்க வேண்டும். பெரும்பாலும் பலர் மளிகை பொருள் வாங்கும் போது மஞ்சளை முதலில் எழுதுவார்கள். வீட்டிற்கு மங்களங்களை அது சேர்க்கும் என்பதால், ஆனால் மஞ்சளானது எப்போதும் எல்லாவற்றுக்கும் செலவு ஆவது இல்லை மஞ்சளை விட அரிசி எந்த அளவிற்கு செலவு ஆகிறது அதே அளவிற்கு ஒரு வீட்டில் துவரம் பருப்பும் செலவு ஆகும். இது மட்டும் இல்லாமல் துவரம் பருப்பானது அன்னபூரணி தாயாருக்கு மிகவும் இஷ்டமான ஒரு தானியம். இந்த தானியத்தை நீங்கள் முதலில் வாங்கும் போது உங்கள் வீட்டில் இல்லாத பற்றாக்குறை வரவே வராது.

ஆகையால் தான் நம் வழக்கத்தில் எந்த விசேஷம் வந்தாலும் அது நல்லதாக இருக்கட்டும், கெட்டதாக இருக்கட்டும் இந்த துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைப்பதை ஒரு வழக்கமாக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருவதற்கான காரணமும் அது தான்.

- Advertisement -

அதே போல் புதிதாக ஒரு வீடு கட்டி பால் காய்ச்சும் போதும் அதில் வீட்டில் மளிகை பொருள் வைப்பது வழக்கம். அதுவும் முக்கியமாக இந்த துவரம் பருப்பும் அதில் இடம் பெற்றிருக்கும். இந்த துவரை அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு தானியம்.

எனவே இனி நீங்கள் வாங்கும் முதல் பணமாகட்டும், கடன் ஆகட்டும் அதில் இந்த துவரம் பருப்பை வாங்கி வைத்து நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை பத்திரமாக வைத்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்திடுங்கள்.

- Advertisement -