- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணவசியம் ஏற்பட குபேர பிரதோஷ தீபம்

பணவசியம் ஏற்பட குபேர பிரதோஷ தீபம்

- Advertisement -

சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீரும். மேலும் மீண்டும் பிறவாத வரம் கிடைக்கும் என்றுதான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் சிவபெருமானை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்தோம் என்றால் குபேரருக்கு நிகரான செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். குபேர பகவானே சிவபெருமானுடைய தீவிரமான பக்தர் ஆவார். அவர் சிவபெருமானை நினைத்து தவமிருந்து சிவபெருமானிடம் வாங்கிய வரம் தான் இந்த குபேரர் என்ற பட்டமே, அப்படிப்பட்ட சிவபெருமானை குபேரருக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வதன் மூலம் நாமும் குபேரருக்கு இணையான செல்வ வளத்துடன் வாழ முடியும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர பிரதோஷ தீபம்

வியாழக்கிழமை என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வங்களாக திகழ்பவர்கள் குபேரரும், குரு பகவானும் தான். இவர்கள் இருவருக்குரிய இந்த தினத்தில் சிவபெருமானுக்குரிய திதியும் சேர்ந்து வருகிறது என்னும் பட்சத்தில் அன்றைய நாளை நாம் துளி கூட தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய சிவபெருமானின் அருளோடு மட்டுமல்லாமல் குபேரரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்றே கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் குபேரருக்கு இணையான வளங்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை குபேரருக்குரிய நேரமான மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் ஏற்ற வேண்டும். இந்த நேரமானது பிரதோஷ நேரமாகவும் கருதப்படுகிறது. ஒருவேளை அந்த நேரத்தில் தீபம் ஏற்ற இயலாது என்று நினைப்பவர்கள் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் தீபம் ஏற்றலாம்.

இதற்கு வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப வெள்ளை கொண்டைக்கடலையை பரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். தீபத்தை ஏற்றி வைத்த பிறகு அந்த தீபச்சுடரொளியை பார்த்தவாறு குபேர பகவானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளோடு குபேரனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் குபேராய வசி வசி”

இதையும் படிக்கலாமே: பணம் சேர பண விதி
குபேர பகவானின் இந்த ஒரு எளிமையான மந்திரத்தை குபேரருக்குரிய நேரமும் பிரதோஷ நேரம் ஆன மாலை நேரத்தில் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் குபேரருக்கு இணையான செல்வ வளம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்