கொரானா பற்றி முன்கூட்டியே சொன்ன பஞ்சாங்கம். என்ன சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா?

- Advertisement -

இந்த உலகமே பயந்து, வியந்து வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க காரணமாக இருப்பது இந்த கொரானா வைரஸ் தான். இந்தக் கொரானா வைரசுக்கு ஆயுள்காலம் என்பது 12 மணி நேரம் தான். ஆனால் அது நம் உடம்பிற்குள் புகுந்து கொண்டால், நம்முடைய ஆயுட்காலம் குறைந்து விடும் என்பது தான் உண்மை. பல பேருடைய ஆயுள்காலம் முடிந்ததையும், பல நாட்களாக பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். பல தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இந்த நிலையில், வந்த வைரசுக்கு நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றோம். ஆனால் நம் முன்னோர்கள் கிரக நிலையை வைத்து, பஞ்சாங்கத்தில் அந்த காலத்திலேயே ‘இன்று, இந்த நாளில் கொடிய வைரஸ் நம்மைத் தாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்’ என்றால் அதை நீங்கள் நம்புவீர்களா?

covid-19-panjangam

நம்பித்தான் ஆகவேண்டும். இப்படி ஒரு வைரஸ் நம்மை தாக்கும் என்றும், அந்த கொடிய வைரஸ் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கும் என்றும், ஜூன் மாதம் முழுமையாக குணமாகும் என்றும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே தகவல் இருக்கின்றது.

- Advertisement -

இத்தனை உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த வைரசை நினைத்து துக்கப்படுவதா? இல்லை இப்படி ஒரு கொடிய நோய் வரும் என்று முன்கூட்டியே நம்முடைய தமிழ் பஞ்சாங்கத்தில் கூறியிருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா? எது எப்படியாக இருந்தாலும் நம் முன்னோர்களின் கூற்று மட்டும் என்றுமே பொய்யாகாது.

Coronavirus3

இந்த கொடுமையான கொரான வைரஸில் இருந்து தப்பிக்க நம்முடைய பாரம்பரிய வாழ்க்கைக்கு, நாம் திரும்புவது தான் ஒரே வழி. AC காரில் செல்லாதீர்கள். AC ஹோட்டலில் சென்று உணவு அருந்தாதீர்கள். நன்றாக வெயிலில் உலாவுங்கள். வீட்டிலேயே சாப்பிடுங்கள். சுத்தமாக இருங்கள். நோய்

- Advertisement -

எதிர்ப்பு சக்தியை தரும் மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு, இஞ்சி, டீ குடிப்பது மிகவும் சிறப்பான மருந்து. யாருக்கும் கை கொடுக்காதீர்கள். அது நம்முடைய பழக்கம் அல்ல. இந்திய பாரம்பரியப்படி, கலாச்சாரப்படி, இரண்டு கைகளை கூப்பி வணங்குங்கள்.

Coronavirus1

இப்படி வணங்கி நம் நாட்டில் இருக்கும் கொடுய கொரானாவை விரட்டி அடிப்போம். நம் முன்னோர்கள் சொன்ன பழைய பாரம்பரியத்தின்படி வாழ்வோம். பெரிய கும்பிடு போட்டு கொரானாவை துரத்தி அடிப்போம். எவ்வளவு பெரிய வைரஸ் வந்தாலும், அதை சமாளித்து சாதிப்பதில் தான் நம் வெற்றி அடங்கியுள்ளது.

- Advertisement -