“விளம்பி” ஆண்டு மழைப்பொழிவு குறித்து பஞ்சாங்கம் கூறுவது என்ன?

flood
- Advertisement -

மழை என்பது இயற்கை அன்னை பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமாக இருக்கும் தண்ணீரை கொடுக்கும் ஒரு வரம் ஆகும். இந்த மழை மிக குறைந்த அளவில் பெய்தாலும் அல்லது மிக அதிக அளவில் பெய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களையும் பாதிக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தை மூழ்கச்செய்யும் அளவிற்கு பெய்த பெருமழையை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மீண்டும் பெருமழை பெய்து அதனால் தங்களுக்கு பாதிப்பு உண்டாகுமோ என மழைக்காலங்களில் மக்கள் அஞ்ச தொடங்கி விடுகின்றனர். நமது பஞ்சாங்கங்கள் இந்தாண்டு மழையை பற்றி கூறும் செய்தி என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

chennai flood

இந்த வாரத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 7.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தின் அநேக இடங்களில் மிகுந்த மழை பொழியும் என்றும், சில இடங்களில் 25 சென்டிமீட்டர் அளவிற்கு மழைபொழிவின் அளவு இருக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அனைவரும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் “ரெட் அலெர்ட்” எனும் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. ஆனால் 6.10.2018 தேதியிலேயே எதிர்பார்த்த கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் குறைந்து விட்டதாக நிச்சயித்து, முன்பு வெளியிட்ட ரெட் அலெர்ட் அறிக்கையை திரும்ப பெற்றது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.

- Advertisement -

நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு மழையை கணிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நமது முன்னோர்கள் விண்ணில் இருக்கும் கிரகங்கள், நட்சத்திரங்களின் நிலைகளை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மழை எந்தளவு பெய்யும் என்பதை கணித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் இப்போது நடக்கும் “விளம்பி” தமிழ் ஆண்டு பஞ்சாங்க கணிப்பு படி இந்தாண்டு புயலுடன் கூடிய அதிக மழை இருக்கும். இரவு நேரங்களில் அதிகளவு மழை பெய்யும். 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை தொடர் மழை சில இடங்களில் பெய்யும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஐப்பசி முதல் கார்த்திகை மாதம் முடியும் காலம் வரை பருவ மழை விட்டு விட்டு பெய்ய கூடும் என பஞ்சாங்களில் கூறப்பட்டுள்ளது.

rain

பஞ்சங்களில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும், அவை நிச்சயம் நடந்தே தீரும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில் இயற்கை அல்லது இறைவனின் அருட்கொடையான இந்த பருவ மழைப்பொழிவு பல முறை பஞ்சாங்கம் மற்றும் வானிலை ஆய்வறிக்கைக்கு மாறாக அதிக மழைபொழிவோ அல்லது குறைந்த மழைபொழிவோ ஏற்பட்டதை நம்மில் பெரும்பாலானோர்கள் கண்டிருக்கிறோம். எத்தகைய ஆபத்திலிருந்தும் நம்மை காத்துக்கொள்ள எச்சரிக்கை உணர்வு நமக்கு அவசியம். அதை மனதில் கொண்டு நாம் முன்ச்சரிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய கடினமான காலங்களிலிருந்தும் நாம் சுலபத்தில் மீண்டு வரலாம். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் சரியான அளவு நீர் கிடைக்காத தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பொழிவு ஏற்பட்டு வறட்சி, குடிநீர் பஞ்சம் போன்றவை நீங்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குரு பெயர்ச்சிக்கான பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரியா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -