இதுவரைக்கும் பூக்கவே பூக்காத பன்னீர் ரோஜா செடியில் கூட பூ பூக்க சின்னசின்ன டிப்ஸ்!

- Advertisement -

சில பேர் வீடுகளில் பெங்களூர் ரோஸ் செடி வகைகளை வாங்கி வைத்தால், நன்றாக பூக்கும். ஆனால், இந்த வாசம் மிகுந்த பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் பூப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். நுண்ணுயிர் சத்துக்கள், மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்து, சரியான விகிதத்தில் இருந்தால் தான், பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பன்னீர் ரோஜா செடியில், விரைவாக அதிகப்படியான பூக்களை பூக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

panner-rose

இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தயாரிப்பதற்கு ஐந்திலிருந்து ஆறு வாழைப்பழத் தோல், காய்ந்த தோலாக இருந்தாலும் பரவாயில்லை, அல்லது பச்சையாகவே இருந்தாலும் பரவாயில்லை. 1/2 கப் அளவு டீ தூள்(50கிராம்), 2 டேபிள் ஸ்பூன் அளவு காபி தூள், அரை கப் அளவு புளித்த தயிர்.

- Advertisement -

மேல் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஒரு லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு மூடி வைத்துவிடுங்கள். மூன்று நாட்கள் இந்த தண்ணீர் அப்படியே இருக்கட்டும். மூன்று நாட்கள் கழித்து இந்த தண்ணீரை துறக்கும் போது, அது நுண்ணுயிர் சத்துக்கள் நிறைந்த தண்ணீராக மாறி இருக்கும்.

ஒரு லிட்டர் அளவு இருக்கும் இந்த தண்ணீரை, 5 லிட்டர் நல்ல தண்ணீரோடு கலந்து, குளிக்க பயன்படுத்தும் கப்பில் 1/2 கப் அளவு, உங்களுடைய பன்னீர் ரோஜா செடிகளுக்கு மாதத்திற்கு இரண்டு முறை ஊற்றி வாருங்கள். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை. கூடிய விரைவில் ரோஜாச் செடியில் உள்ள கிளைகள் அனைத்திலும் மொட்டு வைத்து பூ பூக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதோடு சேர்த்து மாதத்திற்கு ஒரு முறை ஊட்டச்சத்து நிறைந்த மண்புழு உரத்தையும் ரோஜா செடிகளுக்கு போட வேண்டும்.

- Advertisement -

பன்னீர் ரோஜா மட்டுமல்ல. பூ பூக்காமல் இருக்கும் எந்த செடிகளுக்கு வேண்டுமென்றாலும் இந்த நுண்ணுயிர் சத்து நிறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம். இதை வடிகட்டி தான் ஊற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதில் இருக்கும் திப்பியோடு கலந்து, ஊற்றினாலே செடிகளுக்கு ஊட்டச்சத்து அதிகமாக கிடைக்கும்.

rose

எப்போதுமே ரோஜா செடிகளில் கிளைகள் நீண்டு உயரமாக வரக்கூடாது. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைகள், இடையிடையே வளருவதற்கு அந்த கிளைகளை வெட்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக பன்னீர் ரோஜாவுக்கும் அதிகப்படியான கிளைகள் இருந்தால், அதில் அதிகபடியான மொட்டுக்கள் வைத்து அதிகப்படியான பூ பூக்கும்.

- Advertisement -

இதேபோல் ரோஜா செடிகளுக்கு எந்த உரத்தை போடுவதாக இருந்தாலும், மண்ணை நன்றாக கிளறி விட்டு விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மண் இறுக்கமாக இறுகி இருக்கக்கூடாது. வேர், மண்ணில் ஊன்றி வளர்வதற்கு சிரமப்படும். ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை சூரிய உதயத்திற்கு முன்பு ஊற்ற வேண்டும். அப்படியில்லை என்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு ஊற்றுவது நல்லது.

rose1

தண்ணீர் ஊற்றுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் பின்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கும், மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தி பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தேவலோக மலரான ‘பாரிஜாத செடியை’ இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் நம் வீட்டிலேயே சின்ன தொட்டியில் கூட சுலபமாக வளர்க்கலாம்!

இது போன்ற மேலும் பல தோட்டக்கலை சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -