உங்கள் ராசிக்கு பங்குனி மாதத்தில் எந்த தெய்வத்தை வணங்கினால் நன்மை பெருகும்

astrology
- Advertisement -

மார்ச் மாதம் 15-ம் தேதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை பங்குனி மாதம் உள்ளது. இந்த நாட்களில் உங்கள் ராசிக்கான அதிஷ்டமான நாட்கள் எவை, அதிஷ்ட எண்கள் எவை, எந்த தெய்வத்தை எப்படி வணங்கினால் உங்களுக்கு நன்மை பெருகும் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
அதிர்ஷ்ட நாள்கள்:

- Advertisement -

மார்ச் – 15, 16 , 20, 21 ,24, 25, 30, 31
ஏப்ரல் – 1, 2, 3, 9, 10, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 7, 8
வழிபடவேண்டிய தெய்வம்: பைரவர், முருகன்

- Advertisement -

வழிபாட்டு முறை: 

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்வதும், செவ்வாயன்று முருகன் கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 15, 16, 17, 18, 19, 22, 23, 27
ஏப்ரல் – 2, 3, 4, 5, 6, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள், துர்கை

வழிபாட்டு முறை: 
சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதுடன், செவ்வாயன்று துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.

இதையும் படிக்கலாமே:
ரிஷப ராசி பொதுவான குணங்கள் பற்றி தெரியுமா ?

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 18, 19, 20, 21, 24, 25 ,28, 29
ஏப்ரல் – 4, 5, 6, 7, 8

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

வழிபடவேண்டிய தெய்வம்: சிவன், அனுமன்

வழிபாட்டு முறை: 

திங்களன்று மாலையில் சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும், சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவிப்பதும் நற்பலன்களை அதிகரிக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் 20, 21, 22, 23, 27, 30;
ஏப்ரல் 1, 7, 8, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விஷ்ணு

வழிபாட்டு முறை:

புதன்கிழமைகளில் மகாவிஷ்ணுவை துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நலம் சேர்க்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 15, 16, 22, 23, 24, 25, 28, 29
ஏப்ரல் – 2, 3, 9, 10, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

வழிபாட்டு முறை:
செவ்வாயன்று முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களைத் தரும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 15, 16, 17, 18, 19, 24, 25, 26, 27, 30, 31
ஏப்ரல் – 1, 4, 5, 6, 11, 12, 13

 

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்

வழிபாட்டு முறை:
வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், சங்கடசதுர்த்தியன்று விநாயகர் வழிபாடும் பிரச்னைகளைப் போக்கி, நன்மைகளை அருளும்.

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 18, 19, 20, 21, 27, 28
ஏப்ரல் – 2, 3, 7, 8

அதிர்ஷ்ட எண்கள்:5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

வழிபாட்டு முறை:
வெள்ளியன்று மகாலட்சுமி தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால், சுபகாரியத் தடைகள் விலகும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 20, 21, 22, 23, 28, 29, 30, 31
ஏப்ரல் – 1, 4, 5, 6, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, நரசிம்மர்

வழிபாட்டு முறை:
வெள்ளியன்று துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், சுவாதியன்று மாலை நரசிம்மர் வழிபாடு செய்வது நலம் சேர்க்கும்

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 15, 16, 22, 23, 24, 25, 30, 31
ஏப்ரல் – 1, 2, 3, 7, 11, 12, 13

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, பைரவர்

வழிபாட்டு முறை:
ராகு காலத்தில் துர்கை வழிபாடும், அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நன்மை தரும்,

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

மார்ச் – 18, 19, 24, 25, 27
ஏப்ரல் – 2, 3, 4, 5, 6, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன், நந்தி
வழிபாட்டு முறை:
முருகன் கோயிலில் நெய் தீபம் ஏற்றுவதும், பிரதோஷத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்வதும் நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே:
மகர ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 1, 16, 20, 21, 27, 28, 29
ஏப்ரல் – 4, 5, 6, 7, 8, 11, 12

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமுர்த்தி, முருகன்

வழிபாட்டு முறை:
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், வியாழனன்று தட்சிணாமுர்த்தி வழிபாடும், சஷ்டியன்று முருகனுக்கு அர்ச்சனையும் செய்வது நலம் சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
கும்ப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

மார்ச் – 18, 19, 22, 23, 28, 29, 30, 31
ஏப்ரல் – 1, 7, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவன், சனி பகவான்

வழிபாட்டு முறை:

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்வதும் நன்மைகளை அருளும்.

இதையும் படிக்கலாமே:
மீன ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

ஆன்மிக கதைகள், மாத பலன் ,மந்திரங்கள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -