பங்குனி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Panguni

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க சரியான சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் மனம்விட்டுப் பேசுவது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு விருத்தி காண புதிய உத்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் தள்ளிப்போடுவது நல்லது. ஆரோக்யம் சிறப்பாக அமைய உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சிறப்பான மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இருக்கும் சிக்கல்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். புதிய வீட்டில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்கிற மன உளைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் முன்னேற்றம் மேலும் வலுவாக கூடுதல் முயற்சி செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளை வழி நல்ல செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறக் கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் புதிய சிந்தனைகள் பிறக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணங்கள் உருவாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றத்திற்கான பாதையை வழி வகுத்துத் தரும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த முயற்சிக்கு திடீரென நடக்கத் துவங்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் எதிர்கால திட்டமிடல் மேலோங்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் படிபடியாக மறையும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சிறப்பான அமைப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கப்பெறும். மேலும் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவரது மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும். குடும்பத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனைகள் வலுவாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இம்மாதம் இனிய மாதமாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகளுக்கு தகுந்த பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். யாருக்கும் முன்ஜாமீன் போடும் முன் யோசனை செய்து கொள்வது நல்லது. தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்கள் பல தடைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி அடையும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை விட அதிகமாக நல்ல பலன்களை பெறுவீர்கள். இதுவரை இருந்துவந்த கடன்களும் நீங்கப் பெறும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். பண வரவு சீராக இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு உறுதுணையாக உங்களுடைய குடும்பத்தார் இருப்பார்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உம்முடைய திறமைகளைக் கண்டு மற்றவர்கள் வியக்கும் வண்ணம் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்வு பிறக்கும் இனிய மாதமாக அமையும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இம்மாதம் ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்வு பிறக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்குழப்பங்களும் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். குடும்பத்தினரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்க மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். எதையும் திட்டமிடாமல் செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் இணக்கமாக நடந்து கொண்டால் முன்னேற்றம் நிச்சயம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறும். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்க ஒருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வருவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இம்மாதம் தொட்டதெல்லாம் துலங்க கூடிய இனிய மாதமாக அமையும். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் தடையில்லாமல் நிறைவேறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். உங்களை தவறாக எடைபோட்டு அவர்கள் மத்தியில் உங்களுடைய உண்மையான ரூபத்தை புரிய வைப்பீர்கள். எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் நடைபெறக்கூடிய நல்ல விஷயங்கள் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் இருக்கும். விரக்தியில் இருந்து வந்த நீங்கள் மனம் மாறுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். நீங்கள் எடுக்க நினைக்கும் முடிவை ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற விஷயங்களில் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். அரசு வழி காரியங்கள் அனுகூலமான பலன் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.