இன்று நீங்கள் இதை செய்தால் பலன்கள் அதிகம் தெரியுமா?

perumal

27 நட்சத்திரங்களின் கால சுழர்ச்சி அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களில் மாசி மகம், வைகாசி விசாகம் போன்ற தெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் நட்சத்திர தினங்கள் வருகின்றன. அப்படியான ஒரு முக்கியமான நட்சத்திர தினம் தான் பங்குனி நட்சத்திர தினம். இந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது குறித்தும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Perumal

பங்குனி உத்திரம் பல தெய்வீக சிறப்புக்கள் மிகுந்த நன்னாளாக இருக்கிறது. ஸ்ரீ ஐய்யப்பன், பாண்டவர்களில் அர்ஜுனன், முருகனின் மனைவியான வள்ளி ஆகியோர் ஜனித்த தினம் பங்குனி நட்சத்திர தினமாகும். மேலும் இந்த பங்குனி உத்திர தினத்தில் தான் பார்வதி – பரமேஸ்வரன், ஆண்டாள் – ரெங்கமன்னார், மீனாட்சி – சுந்தரேஸ்வரர், தெய்வானை – முருகன் போன்றோர்களின் தெய்வீக திருமணங்கள் நடைபெற்றன. எனவே பெரும்பாலான கோயில்களில் இந்த தினத்தில் விஷேஷ பூஜைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.

இந்த பங்குனி உத்திரம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டில் உள்ள பூஜையறையில் தெய்வங்களின் படங்கள் மற்றும் விக்கிரகங்களுக்கு பூக்கள் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். உத்திரம் நட்சத்திரம் சூரிய பகவானுக்குரிய நட்சத்திரம் என்பதால் கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சூரிய பகுவானுக்கு செந்தாமரை பூ வைத்து, கோதுமை தானியங்கள் சமர்ப்பித்து, தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்குவதால் உடல் நோய்கள் நீங்க பெறுவீர்கள். செல்வம், புகழ், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் போன்றவையும் உண்டாகும். காலையில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் மாலையிலும் சென்று வணங்கலாம்.

sivaparvathi

பங்குனி உத்திரம் தினத்தில் கோயில்களில் நடைபெறும் தெய்வீக திருமண வைபவங்களில் திருமணமானவர்கள் தம்பதிகள் சமேதமாக சென்று, வைபவங்களையும் சிறப்பு பூஜைகளையும் தரிசித்து இறைவனை வணங்கினால் தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். திருமணமாகதவர்கள் தரிசித்தால் திருமணம் விரைவில் நடக்கும். தோஷங்கள் நீங்கும். மேலும் இன்றைய தினத்தில் உங்கள் சக்திக்கேற்ப அன்னதானம் செய்வதால் இறைவனின் அருளால் நீங்கள் விரும்பிய அனைத்தும் வாழ்வில் கிடைக்க பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
சிவன் மலை ஆண்டவர் பெட்டியில் வேல், அதன் அர்த்தம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni uthiram special in Tamil. It is also called as Uthiram natchathiram in Tamil or Panguni uthiram valipadu in Tamil or Panguni matham in Tamil or Panguni matha sirappugal in Tamil.