சில குடும்பங்களில் எல்லாம் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நமக்கு முன்னால் வாழ்ந்து முடித்த தலைமுறையினருக்கும் வாழ்க்கையில் சந்தோஷம் என்பது இருந்திருக்காது. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைக்கும் சந்தோஷம் கிடைக்காது. அடுத்த சந்ததியினர் இப்போது குழந்தைகளாக பிறந்திருப்பார்கள் அல்லவா, இந்த தலைமுறையில் பிறந்த குழந்தைகளும் கஷ்டப்படும்.
இப்படி தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக சில கஷ்டங்கள் ஒரு குடும்பத்தை பின்தொடர வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு சதாகாலமும் கஷ்டம் வரக்கூடிய சூழ்நிலை இருந்தால், அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக வாழ முடியாமல் தவித்து வருவார்கள். உங்களுடைய குடும்பத்தில் இதுபோல ஏதாவது கஷ்டம் இருந்தால் சரி, அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட நாளைய தினம் முருகர் வழிபாட்டை குடும்பத்தோடு சேர்ந்து மேற்கொள்ளுங்கள்.
அதிலும் குறிப்பாக பின் சொல்லக்கூடிய இந்த மூன்று விஷயங்களை நாளைய தினம் எவர் ஒருவர் செய்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் இருக்கும் நீண்ட நாள் துன்பங்கள் கூட ஒரு நொடிப் பொழுதில் விலகும் அதற்கு முருகன் தான் பொறுப்பு.
பங்குனி உத்திரத்தன்று பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள்
நாளைய தினம் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, முருகனை வழிபாடு செய்ய வேண்டும். முதல் விஷயம் முருகனுக்கு 6 விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். 6 விளக்குகளிலும் கட்டாயம் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு. வருடத்திற்கு ஒரு நாள் தான் ஏற்ற போகிறீர்கள். சுத்தமான நெய் வாங்கி அதில் விளக்கு போட்டு பாருங்கள். முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். தீப வழிபாடு முதல் வழிபாடு.
இரண்டாவதாக பங்குனி உத்திரத்தன்று செய்ய வேண்டியது அன்னதானம். அன்னதானமா? நிறைய செலவு செய்ய வேண்டுமா? என்றெல்லாம் நினைக்கக் கூடாது. பங்குனி உத்திரத்தன்று இரண்டு பேருக்கு தயிர் சாதம் வாங்கி அன்னதானம் கொடுத்தாலும் அதன் மூலம் அபரிவிதமான பலன் கிடைக்கும். 10 பேருக்கு நீர் மோர் வாங்கி தானம் கொடுத்து பாருங்கள்.
குடும்பத்தில் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு கூட நிம்மதியான ஒரு தீர்வை அந்த முருகப்பெருமான் காட்டிக் கொடுப்பார். இது இரண்டாவது விஷயம். உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது என்றால், தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோரை முருக பக்தர்களுக்காக தயார் செய்து கொடுக்கலாம். இது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை கொடுக்கும்.
மூன்றாவது விஷயம். அப்பன் முருகனை பாதங்களைப் பார்த்து வணங்க வேண்டும். அவனது பாதங்களை பார்த்து உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி வழிபாடு செய்தால், உங்களுடைய துன்பங்களுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். எந்த கடவுளை பாதத்தை பார்த்து வணங்கினாலும் புண்ணியம் தான்.
இருந்தாலும் நாளைய தினம் பங்குனி உத்திரத்தன்று, முருகப்பெருமானின் திரு பாதங்களை எவன் ஒருவன் இரண்டு கண்கள் குளிர தரிசனம் செய்து, வழிபாடு செய்கின்றானோ, அவன் வாழ்க்கையில் செய்த பாவங்கள் எல்லாம் விலகும், கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்பது நிதர்சனமான உண்மை.
முருகனின் பாதங்களுக்கு அத்தனை கருணை இருக்கிறது. அத்தனை சக்தி இருக்கிறது. எத்தனையோ ஞானிகள் மகான்கள் முருகனின் பாதத்தை வணங்கி தான் மோட்சத்தை அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். நீங்கள் முருகனுக்கு விளக்கு போடவில்லை, முருகனை நினைத்து அன்னதானம் செய்யவில்லை, முருகனை புகழ்ந்து பாடவில்லை, என்றாலும் சரி நாளைய தினம் முருகனது பாதங்களை மட்டும் பார்த்து வணங்கி பாருங்களேன்.
இதையும் படிக்கலாமே: பங்குனி உத்திரம் தினை மாவு விளக்கு
இந்த உலகத்தில் உங்களுக்கு கிடைக்காத சந்தோஷமே இருக்காது. அடுத்த பங்குனி உத்திரம் வரும் நாளில் உங்களுடைய வாழ்க்கை ஓஹோன்னு உயரத்திற்கு சென்று இருக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு நல்ல பலனை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.