- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இன்று பங்குனி வளர்பிறை அஷ்டமி – இதை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு

துஷ்டம் என்றாலே தீயது என்று பொருள். வாழ்வில் பல நேரங்களில் இந்த துஷ்ட சக்திகளின் ஆதிக்கமே மேலோங்குகின்றன. எந்த ஒரு தீய சக்தியும் அணுகாமல் காப்பவர் ஸ்ரீ பைரவ மூர்த்தியாவார். அந்த பைரவரை வழிபடுவதற்கு உரிய சிறந்த தினங்களாக மாதத்தில் வரும் அஷ்டமி தினங்கள் இருக்கின்றன. அதில் பங்குனி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். அதிலும் இன்று வெள்ளிக்கிழமை வரும் சிறப்பு மிக்க பங்குனி மாத வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும்.

- Advertisement -

இன்றைய தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.

மேற்சொன்ன முறைப்படி இன்று பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அடிக்கடி கருச்சிதைவு உண்டாகாமல் இருக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni valarpirai ashtami in Tamil. It is also called as Valarpirai ashtami palangal in Tamil or Ashtami bairavar valipadu in Tamil or Panguni matham in Tamil or Valarpirai ashtami valipadu in Tamil.

- Advertisement -