அடிக்கடி கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, சுக பிரசவம் உண்டாக இதை செய்யுங்கள்

rajarajeswari
- Advertisement -

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று கூற முடியாது. திருமணத்திற்கு பின் அனைவரின் குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையான பிரச்சனை இருக்கவே செய்கிறது. அதிலும் திருமணமான பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இதற்கு காரணம் கந்தர்வ தோஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது. இந்த தோஷத்தை போக்கி சிறப்பானதொரு திருமண வாழ்வு அமைய மேற்கொள்ள வேண்டிய விரத முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கந்தர்வ தோஷத்தை நீக்கும் தெய்வமாக அன்னை ராஜ ராஜேஸ்வரி இருக்கிறாள் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரின் அம்சமாக இந்த ராஜராஜேஸ்வரி தேவி இருக்கிறார். எனவே இந்த கந்தர்வ தோஷ நிவர்த்தி பூஜை செய்யும் நபர்கள் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி, தூபங்ள் கொளுத்தி, இரண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நைவேதியம் செய்து, ராஜராஜேஸ்வரி அம்மனுக்குரிய மந்திரங்கள், லலிதா சகஸ்ஹர நாமம் போன்றவற்றை மனமொன்றி துதிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம். பின்பு மாலையில் மீண்டும் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு மீண்டும் தூபங்கள் கொளுத்தி தீபாராதனை காட்டி அம்மனை வழிபட்ட பிறகு, அம்மனுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட பிரசாதங்களை இரவு உணவாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

திட சித்தத்தோடு இந்த கந்தர்வ தோஷம் விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். பெண்கள் திருமணமாகி கருத்தரிக்காமல் இருப்பது, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது போன்ற குறைகள் நீங்கி அழகான, ஆரோக்கியமான குழந்தை சுக பிரசவத்தில் பிறக்க அருள்புரிவாள் அன்னை ராஜ ராஜேஸ்வரி.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் செல்வம் என்றும் நிலைத்திருக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rajarajeshwari pooja benefits in Tamil. It is also called as Amman valipadu in Tamil or Kulanthai pirakka in Tamil or Thirumanam nadaka in Tamil or Amman poojai muraigal in Tamil.

- Advertisement -