பஞ்சலோக நாணயத்தை வீட்டில் இப்படி வைத்தால் அதிர்ஷ்ட யோகம் பெருகி வருமாம் தெரியுமா?

muruga

ஆன்மீகத்தில் பஞ்சலோகத்திற்கு சிறப்பான சக்திகள் உண்டு. ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. பஞ்சபூதங்களின் அடிப்படையில் உலோகங்கள் செயல்படுகின்றன. பஞ்ச பூத சக்தியையும் ஒன்று திரட்டி பஞ்சலோக கலவையாக செய்யும் பொழுது அதற்கு மிகுந்த சக்தி உண்டாகிறது. பஞ்ச லோகத்திற்கு தெய்வீக ஆற்றலை உள்வாங்கும் அற்புத சக்தி உண்டு. எதிர்மறை ஆற்றலை ஒழித்து, நேர்மறை சக்திகளை வெளிவிடும் தன்மை, இந்த பஞ்ச லோகத்திற்கு உண்டு. செல்வத்தை ஈர்க்கும் தன்மையும் பஞ்ச லோகத்திற்கு அதிகம் உண்டு. வீட்டில் பஞ்ச லோகத்தை எப்படி பயன்படுத்தினால் அதிர்ஷ்ட யோகம் பெருகி வரும் என்பதை இப்பதிவில் காணலாம்.

coins

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி, தெய்வீக சக்தி ஏற்படுவதற்கு பஞ்சலோகம் பெரும் துணை புரியும். சுவாமி படங்களை வைத்து இருந்தால் மட்டும் போதாது, இல்லத்தில் உண்மையில் தெய்வங்கள் வாசம் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும், செல்வமும் நிறைந்திருக்கும். உங்கள் வீட்டில் உண்மையில் தெய்வசக்தி இருக்கின்றதா? என்பதை முதலில் பாருங்கள். தீய சக்திகள் இருக்கும் பட்சத்தில் தெய்வங்களின் சக்தி இருக்காது. முறையாக பூஜைகளை செய்து வந்தால், உங்களின் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு இருந்தால், எதிர்மறை சக்திகள் நீங்கும். வளமான வாழ்க்கை அமையும். சகல செல்வங்களும் நிலையாக தங்கும்.

கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும் பொழுது அஷ்டபந்தன மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்படும். பல பேருக்கு இது தெரிந்திருக்கும். சிலர் தெரியாமலும் இருப்பீர்கள். இந்த அஷ்டபந்தன மூலிகையை சிறிதளவு கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பஞ்சலோக நாணயங்கள் நகை கடைகளில் கிடைக்கும். சுத்தமான பஞ்சலோக நாணயங்களை பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து இந்த பரிகாரத்தை செய்ய தயார்படுத்திக் கொள்ளுங்கள். அஷ்டபந்தன மூலிகை மருந்தை சூடேற்றி உருக்கிக் கொள்ளுங்கள் அதை உங்கள் வீட்டின் நிலைவாசல் கதவின் மேலே தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பஞ்சலோக நாணயங்களை வரிசையாக அதில் ஒட்டிக் கொண்டே வாருங்கள்.

coins1

3, 5, 9 ஆகிய எண்ணிக்கையில் உங்களிடம் இருக்கும் நாணயங்களை வைத்து ஓட்டினால் போதுமானது. பஞ்ச பூத சக்தியை தன்னுள் அடக்கி உள்ளதால் பல வாஸ்து தோஷங்களும் நீங்கப் பெறும். வாஸ்து வினால் ஏற்படும் பிரச்சனைகளும் இதனால் அகலும். எதிர்மறை ஆற்றலானது வாசல் வழியே ஏற்படுவதால், பஞ்சலோக சக்தி எதிர்மறை ஆற்றலை உள்ளே விடாமல் தடுத்து விரட்டிவிடும். இதனால் எதிர்மறை சக்திகளிடமிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். உடல் நலத்திலும், மன நலத்திலும் வியக்கத்தகு மாற்றங்களை இந்த பஞ்ச உலோக நாணயங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். தெய்வீக ஆற்றல் முழுமையாக இடம்பெறும். தெய்வத்தின் அருட்கடாட்சம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

வாடகை வீடுகளில் வசித்து வருபவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவில் சொந்த வீடு வாங்கி கொண்டு போகும் யோகம் வரும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் கைகூடிவரும். உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இந்த பஞ்சலோக பரிஹாரம் அமையும்.

astabanthana-mooligai

அஷ்டபந்தன மூலிகையை தவிர வேறு எந்த உட்பொருட்களையும் கொண்டு பஞ்ச லோகத்தை ஒட்டக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவாறு செய்வதால் தெய்வீக சக்தி வெளிப்படும். இந்த சக்தி செல்வ வளத்தை மேம்படுத்திக் கொடுக்கும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி தரும் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். சகல அதிர்ஷ்ட யோகங்களும் பெருகி வரும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கனவில் இவையெல்லாம் வந்தால், நிச்சயம் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panjalogam nanayam in Tamil. Panjalogam. Panjalogam in Tamil. Panjalogam coins. Panjalogam Tamil. Panjalogam uses in Tamil.