இந்த பன்னீர் சப்ஜ்ஜியை ஒரு முறை சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டு தான் பாருங்களேன், இத்தனை நாள் இதை சாப்பிடாம மிஸ் பண்ணிட்டோம்ன்னு ரொம்ப பீல் பண்ணுவீங்க.

- Advertisement -

முன்பெல்லாம் டிபன் என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூ,ரி போன்றவை இருக்கும். அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னி தான் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ் வகைகள் வந்து விட்டது அந்த வகையில் இப்போது பன்னீர் வைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: பன்னீர் – 100 கிராம், வெங்காயம் – 3, தக்காளி – 3, பூண்டு – 10, சீரகம் -1 டீஸ்பூன், மஞ்சள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா -1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன், தனியாத்தூள் -1 டீஸ்பூன், பட்டர் – 50 கிராம், கஸ்தூரி மேத்தி – 1டீஸ்பூன், குடை மிளகாய் – 1 சிறியது, உப்பு -1 டீஸ்பூன், இஞ்சி -1 துண்டு நீளமாக நறுக்கியது, கொத்தமல்லி -1 கைப்பிடி அளவு.

- Advertisement -

இதை செய்வதற்கு முன் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே போல் குடைமிளகாய் பன்னீர் இவைகளையும் ஒரு மீடியம் சைஸில் நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விடுங்கள். அதன் பிறகு பூண்டு பல்லை அதில் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து நல்ல நிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு மஞ்சள் தூள் தனியா தூள் கரம் மசாலா, உப்பு இவையனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இதன் பிறகு அறிந்து வைத்த தக்காளியை அதில் சேர்த்து அதையும் நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் இறங்கியவுடன் குக்கரில் இருக்கும் கிரேவியை மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மற்றொரு புறம் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து பட்டரை அதில் சேர்த்து அறிந்து வைத்த குடைமிளகாய், இஞ்சி, பன்னீர் இவையெல்லாம் சேர்த்து லேசாக வதக்கி நிறம் மாறாமல் எடுத்து அதை இந்த வெங்காயம், தக்காளி மசித்து வைத்த கிரேவியில் சேர்த்து விடுங்கள்.

இப்போது மீண்டும் அடுப்பை பற்ற வைத்து இந்த கிரேவியை கொதிக்க விடுங்கள் கடைசியாக இந்த கிரேவியில் கொஞ்சம் கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லியை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பன்னீர் சப்ஜி ரெடி.

- Advertisement -