முறையான பால் பாயாசம் 10 நிமிடத்தில் பாரம்பரிய சுவையில் செய்வது எப்படி தெரியுமா?

paal-payasam
- Advertisement -

சேமியா, ஜவ்வரிசி எல்லாம் சேர்த்து செய்யும் பால் பாயாசம் பாரம்பரியமாக செய்து வரும் ஒரு இனிப்பு வகையாகும். வீட்டிலிருக்கும் எல்லோருமே பால் பாயாசம் பிரியர்களாக இருப்பார்கள். நல்ல நாள், விசேஷம் என்று வரும் பொழுது முதல் தேர்வாக நமக்கு அமைவது இந்த பால் பாயாசம். முந்தைய காலங்களில் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் தாய்மார்கள் பால் பாயாசம் செய்து கொடுப்பார்கள். பின்னர் அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். இந்த பால் பாயாசத்தை ரொம்பவே சுலபமாக செய்து விட முடியும்! இதனை முறையாக பாரம்பரிய சுவையில் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sara-paruppu

‘பால் பாயாசம்’ செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 100 கிராம், சேமியா – 100 கிராம், சர்க்கரை – 250 கிராம், ஏலக்காய் – 4, முந்திரி – 20, திராட்சை – 20, சாரப்பருப்பு – 50 கிராம், காய்ச்சி ஆறின பால் – 200ml, பசு நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

‘பால் பாயசம்’ செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்து வருவதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும். ஜவ்வரிசி படபடவென பொரியும் ஓசை கேட்கும், அதுவரை குறைந்த தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் தண்ணீரில் வறுத்து வைத்துள்ள இந்த ஜவ்வரிசியை சேர்த்து அடுப்பை மீடியம் ப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

semiya-payasam

பின்னர் அதே வாணலியில் நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து ஜவ்வரிசியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் திராட்சை சேர்த்து வறுத்து சேருங்கள். பின்னர் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் சாரப்பருப்பை பொன்னிறமாக வறுத்து சேருங்கள். சாரப்பருப்பு என்பது பிரியாணி, பாயாசம் போன்றவற்றை செய்ய பயன்படும் ஒரு வகையான பொருளாகும். இதில் இருக்கும் புரதம், கொழுப்பு, நார்சத்து, கால்சியம், மெக்னீசியம், பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகியவை உடலுக்கு வலு சேர்க்க கூடியவை. மேலும் உடலை குளிர்ச்சி அடையச் செய்து ஆரோக்கியம் காக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்த பருப்பு சாரோலி என்றும் கூறப்படும்.

- Advertisement -

பின்னர் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்க வேண்டும். அனைத்தும் கலந்து நன்கு கொதித்து ஜவ்வரிசி வெந்த பின்பு அதில் நான்கு ஏலக்காய்களை நன்கு பொடி செய்து போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் காய்ச்சிய பசும் பாலை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சூடாக இருக்கும் பாலை சேர்த்தால் கட்டாயம் பால் திரிந்து பாயாசம் வீணாகிவிடும்.

javvarisi-payasam

ஒன்று பாயாசம் ஆறி இருக்க வேண்டும் அல்லது பசும்பால் ஆறி இருக்க வேண்டும். அப்போது தான் பால் திரியாமல் பாயசத்துடன் கலந்து சுவையான பால் பாயாசம் ஆக நமக்கு கிடைக்கும். மேற்கூறிய இதே முறையில் நீங்கள் பால் பாயாசம் செய்தால் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பாயாசம் போல மிகவும் சுவையானதாக இருக்கும். பத்தே நிமிடத்தில் பட்டென செய்யக்கூடிய இந்த பால் பாயசத்தை நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -