வாழ்வில் முன்னேற்றமடைய செய்யும் பரிகாரங்கள்.

kovil1

பலருக்கும் வாழ்வில் பலவிதமான துன்பங்கள் இருக்கும். ஒவ்வொரு துன்பத்தையும் விளக்கி வாழ்வில் முன்னேற்றம் அடைய சில பரிகாரங்கள் உள்ளன. அதன் படி சில துன்பங்களை போக்குவதற்கான பரிகாரங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

* வியாழக்கிழமைகளில் மகிழ மரத்தை குருவாக நினைத்து பூஜை செய்து துவர உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நன்றாகப் படித்துக் கல்விமானாக வருவார்கள்.

* புன்னை மரத்தை திருமணம் தடைபடுவோர் சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

* வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் முப்பெருந்தேவியரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். பிறகு நவசக்தி தீபத்தில் எண்ணெய் விட்டுப் பிரார்த்தித்தால் நவகிரக தோஷங்கள் விலகும். தள்ளிப்போகும் திருமணம் நடைபெறும்.

* ஆஞ்சநேயரை வடை மாலை சாத்தி வழிபட்டால் நவக்கிரஹ தோஷம் நீங்குகிறது.கேது தடை மற்றும் கேது புத்தி நடப்பில் இருந்து துன்பம் அனுபவிப்பவர்கள் சித்ர குப்தனை வழிபட வேண்டும்.

* குரு பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். குரு தோஷம் இருக்கிறது என்று உங்கள் ஜோதிடர் சொன்னால் கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்.

தெட்சிணாமூர்த்தி- கோவிந்தவாடி- (காஞ்சீபுரம்)
தெட்சிணாமூர்த்தி- பட்டமங்கலம்- (சிவகங்கை)
வசிஷ்டேஸ்வரர்- தென்குடித்திட்டை- (தஞ்சாவூர்)
சுப்பிரமணியசுவாமி- என்கன்- (திருவாரூர்)
ஆதிநாதர்- ஆழ்வார் திருநகரி- (தூத்துக்குடி)
வாலீஸ்வரர்- கோலியனூர்- (விழுப்புரம்)