குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீங்கச்செய்யும் பரிகாரம்

prachanaigal-neenga

சில குடும்பங்களின் எப்பொழுதும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். தேவையற்ற விசயத்திற்கெல்லாம் சண்டை வரும். சில குடும்பங்களில் எவ்வளவு செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்காது. இதற்கு காரணம் குடும்ப தோசமாகக்கூட இருக்கலாம். இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகள் குடுப்பதில் வராமல் இருக்கவும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், குடும்ப தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபடவும் மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

ஒரு வெள்ளை தாளில் உங்கள் குடும்பத்தில் காலமான மூதாதையர்களின் பெயர்களை உங்களுக்கு தெரிந்த வரை எழுதுங்கள்.

பின்பு விரலி மஞ்சள், வெத்தலை பாக்கு, நெல், அட்சதை, ஒரு ரூபாய் காசு போன்றவற்றையும் மூதாதையர்களின் பெயர்கள் எழுதப்பட்ட தாளையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி அதை பூஜை அறையில் வைத்துவிடுங்கள்.

தினமும் இறைவனை வணங்கும்போது இந்த மஞ்சள் துணைக்கும் ஊதுபத்தி சாம்பிராணி காட்டி உங்கள் முன்னோர்களையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அணைத்து படிபடியாக குறைந்து வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.