நீங்கள் செய்த பரிகாரத்திற்கு பலனேதும் கிடைக்கவில்லையா? அப்போது நிச்சயம் இவை உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்

astro-sivan
- Advertisement -

நமக்கு இருக்கும் பிரச்சனைகளை தீர்வதற்காகவே பரிகாரங்கள் செய்கின்றோம். ஆனால் சில சமயங்களில் அனைத்து பரிகார முறைகளையும் சரிவர செய்தாலும் அதற்கான பலன்கள் அனைவருக்கும் கிடைக்கிறதா? என்று யோசித்துப் பார்த்தோம் என்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளுக்காக, மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு பரிகாரங்களை செய்து வருவார்கள். ஆனால் அவ்வாறு செய்வதால் அது சிலருக்கு மட்டுமே சரியானதாக இருக்கும். பெரும்பாலானோருக்கு அவை ஏற்றதாக இருப்பதில்லை. அப்போது என்ன செய்தால், செய்யும் பரிகாரத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்பதனைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

padham-parigaram

ஒருவர் செய்யும் பரிகாரங்களுக்கு பலன் கிடைக்காமல் போவதற்கு அவர்களுக்கு இருக்கும் கர்மவினைகளே காரணமாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது என்ன கர்மவினை நடக்கிறது என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற பரிகாரங்கள் செய்தால் மட்டுமே அவற்றிற்கான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முதலில் அவர்களுடைய ஜாதக பலனை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அவர்களுக்கான கர்ம வினைகள் என்னவென்று தெரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

மூன்று வகையான கர்மாக்கள் உள்ளது “த்ருத கர்மா” தெரிந்தே செய்த பாவம். “த்ருத அக்ருத கர்மா” தெரிந்து செய்த தவறுகளை நினைத்து மனம் திருந்தி மன்னிப்பு கேட்பது. “அத்ருத கர்மா” தெரியாமல் செய்த தவறு. இவற்றில் எந்த கர்மவினை இப்பொழுது உங்களுக்கு நடக்கிறது என்பதனை ஜாதகத்தின் அடிப்படையிலேயே தெரிந்து கொள்ள முடியும். இதனை தெரிந்து அவற்றிற்கான முறையான பரிகாரங்களை செய்து வந்தால் அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

karma

பரிகாரங்கள்:
த்ருத கர்மா:
முன்ஜென்மத்திலோ அல்லது இந்த இந்தப் பிறவியிலோ தெரிந்து பிறருக்கு தீங்கு அளிப்பது த்ருத கர்மா என சொல்லப்படும். பிறர் சொத்துக்களை அவர்களிடம் இருந்து அபகரித்து கொடுமைப்படுத்துவது, பணத்திற்காக பதவிக்காகவ கொலைகள் செய்வதும், தாய், தந்தையரை கொடுமைப்படுத்துவதும் இந்த பாவங்களுக்கு எல்லாம் மன்னிப்பு என்பதே கிடையாது. அவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன், குரு இவர்களின் தொடர்பு அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்பும் இருக்காது.

- Advertisement -

இவர்கள் எந்த பரிகாரம் செய்தாலும் இவர்களுடைய பாவங்களும், கஷ்டங்களும் தீராது. ஆனால் இவர்களுடைய துன்பங்கள் இவர்களின் தலைமுறைகளுக்கு தொடராமல் இருக்க முடிந்த வரை அன்னதானம் செய்து வரலாம்.

thinking-men-astro

த்ருத அத்ருத கர்மா:
தீமை என்று தெரியாமல் செய்த தவறுகளும், தீயவர்கள் என்று தெரியாமல் அவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து உங்களுக்கே தெரியாமல் பலருக்கு தீமை விளைவிப்பதும் த்ருத அத்ருத கர்மா எனப்படும். இவற்றை நினைத்து மனம் வருந்தி அவற்றுக்கான பரிகாரங்களை செய்து வருபவர்கள் நிச்சயம் இந்த பாவங்களிலிருந்து விடுபட முடியும். இவரின் ஜாதகத்தில் லக்கினம், சூரியன், சந்திரன் மற்றும் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் அதிபதியின் பார்வை நிச்சயம் இருக்கும்.

agni-sun

அக்ருத கர்மா:
முற்பிறவியிலோ அல்லது இந்தப் பிறவியிலோ தெரியாமல் செய்த சிறிய பாவங்களாகும். இவற்றுக்காக பரிகாரங்கள் ஏதும் தேவையில்லை. செய்த தவறை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போதும். அவர்களுடைய ஜாதகத்தில் சூரியன், லக்னம், சந்திரன், குரு மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் பார்வை இயல்பாகவே இருக்கும்.

- Advertisement -