ஜாதகத் தடை நீங்கி செல்வம் சேரவேண்டுமா? இந்த பரிகாரம் செய்யுங்கள்

money

ஒருவர் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் சரியான இடத்தில் இல்லை என்றால் பண பிரச்சனை, தொழில் பிரச்சனை, குழந்தை செல்வம் அடைவதில் தாமதம் என பல பிரச்சனைகள் வரும். ஆனாலும் கவலைப்பட தேவை இல்லை. கடவுளை மிஞ்சியவர் எவரும் இல்லை. கடவுளுக்கு சில பரிகாரங்கள் செய்வதன் மூலமாக வாழ்வில் வளங்களை பெற முடியும். கோயிலிற்கு சென்று செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய பரிகாரம் என இரு எளிய பரிகாரங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

money

பரிகாரம் 1

பணம் மற்றும் தொழில் ரீதியாக பல தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்களும், ஜாதக தோஷங்களை போக்கி வீட்டில் செல்வம் சேர விரும்புபவர்களும் செல்ல வேண்டிய சிறந்த ஆலயம் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில்.

தஞ்சை மாவட்டத்தில், காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்த கோயிலிற்கு சென்று ஒரு நாள் முழுவதும் தங்கி இறைவனுக்கு அர்ச்சனையும், ஆராதனையும் செய்வதன் மூலமாக அனைத்து விதமான பண பிரச்சனையில் இருந்தும் விடுபடுவதோடு செல்வமும் சேரும்.

money

- Advertisement -

பரிகாரம் 2

வெளியூருக்கு சென்று வழிபடுவது சிரமம் என்று நினைப்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரம் உள்ளது. மூன்றாம் பிறையன்று வீட்டில் தீபம் ஏற்றிவிட்டு ஒரு மலரையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு உங்கள் குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொண்டு உங்கள் குறைகள் அனைத்தையும் மூன்றாம் பிறை சந்திரனிடம் சொல்லி வணங்கவேண்டும்.

money

பிறகு கையில் உள்ள பூவையும் நாயத்தையும் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். இந்த மூலம் வீட்டில் செலவமானது தடை இன்றி சேரும்.