குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதைக் கொடுத்து வழி அனுப்புங்கள்! விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

aandal-baby-valaikappu

பூர்வ ஜென்ம கர்மாக்கள் இருக்கும் பொழுது குழந்தை வரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. சிலருக்கு மூன்று வருடம் பின் குழந்தை பிறக்கும். சிலருக்கு பத்து வருடமாகியும் குழந்தை பிறப்பதில் தொடர்ந்து தடை இருந்து கொண்டே இருக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருக்கும் பொழுது அதற்கான தீர்வுகளை மருத்துவரை அணுகி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் எந்த விதமான பிரச்சினையும் இன்றி சிலருக்கு குழந்தை வரம் என்பது கனவாகவே இருந்து வரும். இத்தகையவர்களுக்கு எளிமையான பரிகாரங்கள் உள்ளன. இவற்றை செய்தால் அடுத்த சில மாதங்களில் உங்கள் மடியிலும் மழலைத் தவழ ஆரம்பிக்கும். இதற்கு என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

baby-cry

நமக்கு ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்களை விட, இன்னும் விசேஷம் இல்லையா? என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். திருமணமாகி ஒரு வருடம் முடிந்து இருந்தால் போதும்! வரிசையாக செல்லும் இடங்களிலெல்லாம் இதே கேள்வியை கேட்டு நச்சரித்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு விசேஷம் இருந்தால்! நானே கூற மாட்டேனா? எதற்கு இவர்கள் கேட்டு நம்மை சங்கட படுத்துகிறார்கள் என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்.

அதிலும் தன்னுடைய வீட்டில் இருக்கும் மாமியார், மாமனார், நாத்தனார் போன்றவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் பொழுது அதிகமாக மனது உளைச்சலுக்கு ஆளாகும். குழந்தை இல்லை என்றால் உடனே அதில் பெண்களுக்கு மட்டும் தான் பங்கு இருப்பது போல் கேள்விகள் தொடுப்பது மனதை இன்னும் காயப்படுத்தும். இன்று இருக்கும் நவீன யுகத்தில் உண்ணும் உணவும், சுற்றியிருக்கும் சூழ்நிலையும் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி மலட்டுத் தன்மையை உருவாக்கி விடுகிறது. இதில் பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

thottil

குழந்தை இல்லையே என்று வருடக்கணக்கில் கோவில் கோவிலாக செல்பவர்களும், அங்கு சென்று தொட்டில் கட்டி வழிபடுபவர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். கோவிலில் சென்று தொட்டில் கட்டும் மரத்தை பார்த்தால் வரிசையாக அளவில்லாமல் தொட்டில்கள் கட்டியிருப்பார்கள். இவ்வளவு பேருக்கு குழந்தை வரம் கிடைப்பதில் பிரச்சனையா? என்று ஆச்சரியமாக பார்க்க தோன்றும். அம்பாள் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூரம் குழந்தை இல்லாதவர்களுக்கு மிகவும் விசேஷமான தினமாக பார்க்கப்படுகிறது.

அன்றைய நாளில் அம்மனுக்கு முளை கட்டிய பச்சைப் பயிறு வயிற்றில் கட்டி விடுவார்கள். அது போல் வளைகாப்பு விசேஷங்கள் நடக்கும். அதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்படும். இந்த நாளில் வளையலை வாங்கிக் கொள்ளும் பெண்களுக்கு விரைவாக குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். மிகவும் கோலாகலமாக அம்மனுக்கு நடைபெறும் வளையல் திருவிழா குழந்தை இல்லாதவர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு நாளாகவும் உள்ளது.

Kannadi-valayal

இந்த வகையில் தினமும் உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்து, மஞ்சள் கிழங்கும், ஜோடி வளையல்களும் கொடுத்து வழி அனுப்ப வேண்டும். இதை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வருகிறார்கள் என்றாலே, இதனை செய்து விடுங்கள். வளையல் பச்சை, மஞ்சள், சிகப்பு போன்ற நிறங்களில் இருப்பது விசேஷமானது. இதனை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது போல் தினமும் ஒரு கப் முளைகட்டிய பச்சை பயறு சாப்பிட்டு வாருங்கள். இந்த இரண்டு விஷயங்களை தொடர்ந்து செய்து பாருங்கள் விரைவில் நிச்சயம் உங்களுக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.