உடல் ஆரோக்கியமாக இருக்க பரிகாரம்

othadam

தினந்தோறும் புது வகையான வியாதிகள் தோன்றும் இக்காலத்தில் நம்மை எந்த ஒரு நோயும் அணுகாமல் காத்துக்கொள்வதே பெரும் சாதனையாக இருக்கிறது. மனிதர்ளுக்கு நோய்கள் ஏற்படுத்துவதில் நவகிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் நீங்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.

Sooriyan

உடல் ஆரோக்கியமாக இருக்க பரிகாரம்

தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, கிழக்கில் சூரியன் உதிக்கின்றன சமயம் சூரிய நமஸ்கரிப்பவர்களுக்கு எந்த வகையான நோய்களும் பீடிக்காது மேலும் கண்பார்வை திறனும் மேம்படும். திங்கட்கிழமைகள் தோறும் சந்திர பகவான் மற்றும் சிவபெருமானை வழிபடுவதால் மன நலம் சீராகும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள், சளித்தொந்தரவுகள் ஏற்படாது. சந்திரனின் மூன்றாம் பிறை தரிசனம் செய்ய ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் பகவான் நமது உடலில் ஓடும் ரத்தத்திற்கு காரகனாகிறார். எனவே ஆரோக்கியமாக இருக்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ரத்த தானம் செய்வது செவ்வாய் பகவானுக்குரிய சிறந்த பரிகாரம் ஆகும்.

புதன் கிழமைகள் தோறும் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் புதனுக்கு சிறிது பச்சை பயிரை நிவேதனமாக வைத்து வழிபட்டு வந்தால், நரம்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும். வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டு வருபவர்களை பக்கவாதம், வாதம் போன்ற வியாதிகளிலிருந்து காப்பார் குரு பகவான். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை விரதம் இருந்து வழிபட்டு வர நீரிழிவு நோய், இனப்பெருக்க உறுப்புக்கள் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.

Sani Baghavan

சனி பகவான் ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிக்கும் கிரகம் ஆகிறார். சனிக்கிழமை தோறும் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நீராடுபவர்களுக்கு நோய்கள் அண்டாத வாழ்வை அருள்கிறார் சனி பகவான். இன்று பலரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக புற்று நோய் உருவெடுத்துள்ளது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒரு நபருக்கு புற்று நோய் ஏற்படுவதற்கு, அவரது ஜாதகத்தில் சனி, ராகு மற்றும் கேது கிரகங்களின் கெடுதலான நிலையே காரணமாக இருக்கிறது. இப்படியான ஜாதக அமைப்பை கொண்டவர்கள் சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் சனி, ராகு மாற்று கேது கிரகங்களை அவற்றிற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து நீங்கும். இந்த பரிகாரத்தை மற்ற எல்லோரும் செய்யலாம்.அணைத்து பிணிகளும் தீர திருவள்ளூர் “ஸ்ரீ வைத்திய வீரராகவ சுவாமி” கோவிலுக்கு சென்று அக்கோவில் குளத்தில் நீராடி, கல் உப்பை அக்கோவிலில் பலிபீடத்தில் வைக்க எப்படிப்பட்ட்ட வியாதிகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
நவ கிரக தோஷம் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Pariharam for Good Health in Tamil.