ஜாதக தோஷங்களுக்கு பரிகாரங்களை முறைப்படி எப்படி செய்வது?

Astrology

மனிதர்களாக பிறந்துவிட்டால் பாவம் செய்யாமல் கட்டாயமாக வாழ்ந்துவிட முடியாது. அந்த இறைவனே மனித அவதாரம் எடுத்து வந்தாலும், ஒரு சில தவறுகளையும்,  பாவங்களையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். என்ன செய்வது? மனித பிறப்பின் கட்டாயம். ஏதோ ஒரு சூழ்நிலையில் அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றோம்.  காலத்தின் கட்டாயம். ஆனால் அதற்கேற்ப நம்முடைய சாஸ்திரங்களில் பரிகாரங்களும் சொல்லப்படுகிறது.

astro

ஒருவருடைய ஜாதகத்தில் தோஷங்களை உண்டாக்கும் கிரகமானது, எந்த ராசியில் நிற்கின்றதோ, அந்த ராசியை வைத்துதான் பரிகாரங்களை செய்ய வேண்டும். அப்படிப் பார்க்கும்போது உங்கள் ராசிக்கு தோஷம் ஏற்பட்டால், எப்படி பரிகாரம் செய்து செய்வது, என்ற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ள குறிப்பு தான் இது.

நெருப்பு ராசிகள் – மேஷம், சிம்மம், தனுசு.
நில ராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம்.
காற்று ராசிகள் – மிதுனம், துலாம், கும்பம்.
நீர் ராசிகள் – கடகம், விருச்சிகம், மீனம்.

rasi-kal

உங்கள் ராசிக்கு தோஷமாக இருக்கும் கிரகம், நில ராசியில் இருந்தால், அந்த கிரகத்திற்கு உரியதான அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும்.

- Advertisement -

உங்கள் ராசிக்கு தோஷமாக இருக்கும் கிரகம், காற்று ராசியில் இருந்தால், அந்த கிரகத்திற்கு உரிய மந்திரங்களை ஜெபித்து, மனதார பூஜை செய்துவர தோஷங்கள் குறையும்.

feeding fish

உங்கள் ராசிக்கு தோஷமாக இருக்கும் கிரகம், நீர் ராசியில் இருந்தால், அந்த கிரகத்திற்கு உரிய பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலமும், குறிப்பிட்ட அந்த பொருட்களை மீன்களுக்கு இறையாக போடுவதன் மூலமும் தோஷங்கள் குறையும்.

உங்கள் ராசிக்கு தோஷமாக இருக்கும் கிரகம், நெருப்பு ராசியில் இருந்தால், அதற்குரிய ஹோமங்களை முறையாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களது தோஷம் குறைக்கப்படும்.

homam

உங்கள் ராசிக்கு எந்த கிரகத்தின் மூலம் தோஷம் இருக்கின்றது, அந்த கிரகம் எந்த ராசியில் இருக்கின்றது என்பதை உங்களது குடும்ப ஜோசியரின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். முறையான பரிகாரங்களை நீங்கள் பிறந்த நட்சத்திர தினத்திலோ, அல்லது தோஷம் தரும் கிரகத்தின் தினத்திலோ, செய்து வரலாம். இதோடு மட்டுமல்லாமல் உங்கள் நட்சத்திரத்தன்று, உங்களுடைய ராசிக்கு உண்டான விருட்சங்களை வழிபடுவது தோஷம் விலக நல்ல பலனைத் தரும்.

சிறு பரிகார குறிப்பு:
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால், திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனையும் செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, தேங்காயின் இரு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும்.

coconut-diya

பொதுவாகவே சிவன் கோவில்களில் கால பைரவரையும், விஷ்ணு கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், தொடர்ந்து வழிபட்டு வந்தால் நம்மிடம் எந்த ஒரு செய் வினையும், கெட்ட சக்தியும் அண்டாது. ஏதாவது செய்வினை தோஷங்கள் இருந்தால் கூட அது நம்மை விட்டு விரைவில் நீங்கிவிடும்.

மாதம் தோறும் உத்திர நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு தொடர்ந்து, 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்து வந்தால் திருமணத்தில் இருக்கும் தோஷங்கள் விலகும். விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
இந்த 6 பொருட்கள் உங்கள் வீட்டு படுக்கை அறையில் இருக்கிறதா? உங்களின் பிரச்சனைக்கு விடிவு காலமே பிறக்காது.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Jathaka dosham pariharam in Tamil. Dosham in Tamil. Graha dosham in Tamil. Dosham neenga pariharam. Jathagam pariharam in Tamil.