இந்த 1 பொருளை மட்டும் யாராவது சும்மா கொடுத்தால் கூட வாங்கிடாதீங்க பெரும் தரித்திரம் வருமாம் தெரியுமா?

sani viratham
- Advertisement -

ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விஷயத்திற்கும் காரகத்துவம் உண்டு. அதன் அடிப்படையில் நவகிரகங்களும் அதன் காரகத்துவம் பெற்ற பொருட்களை ஆட்சி செய்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களில் இந்த ஒரு பொருளை மட்டும் யாராவது இனாமாக கொடுத்தால் கூட நாம் வாங்கிக் கொள்ளக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான ஒரு பொருள் என்ன? அது ஏன்? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

‘வெள்ளி’ சுக்கிர பகவானுக்கு உரிய ஒரு பொருளாகும். எனவே வெள்ளிப் பொருட்கள் வீட்டில் நிறைந்து இருந்தால் அந்த வீட்டில் சுக்கிர பகவானுடைய அருள் பரிபூரணமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒருவருக்கு நீங்கள் பரிசாகவோ அல்லது தானமாக கொடுக்க வேண்டும் என்றால் வெள்ளி பொருட்களை நீங்கள் தானம் கொடுக்கலாம். இதனால் பெறுபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் சுக்கிர யோகம் இருக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

தொன்று தொட்டு அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு வெள்ளியால் ஆன பொருட்களை நாம் பரிசாக கொடுத்து மகிழ்ச்சி கொள்கிறோம். இதனால் உறவுகள் மென்மேலும் வலுபெறும் என்பது ஐதீகம். அதே போல ஒருவருக்கு தானமாகவோ, பரிசாகவோ கொடுக்க கூடாத ஒரு உலோகம் அல்லது பொருள் ‘இரும்பு’ ஆகும். இரும்பு என்பது சனி பகவான் காரகத்துவம் பெற்ற ஒரு பொருளாக இருக்கிறது.

இரும்பினால் ஆன எந்த ஒரு சிறு பொருளையும் நாம் மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்றுக் கொள்ளக் கூடாது. இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் காசில்லாமல் வாங்க கூடாது. காசு கொடுத்து தான் வாங்கி வர வேண்டும். இப்படி வாங்க கூடிய இரும்பு பொருட்கள் நம் வீட்டில் அதிக இடத்தை அடைக்கும் படியும் வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக வடக்கு திசையில் இரும்பு பொருட்களை, கனமான பொருட்களை வைக்கக்கூடாது என்பது வாஸ்து சாஸ்திரமாகும்.

- Advertisement -

வடக்கு குபேரனுக்கு உரிய திசை, எனவே அந்த இடங்களில் இரும்பு சார்ந்த பொருட்களை வைக்கக்கூடாது. இது பணவரவை தடை செய்யும். தையல் மெஷின் போன்ற இரும்பினால் ஆன பொருட்களை அந்த இடத்தில் இருந்து அகற்றி விடுவது நல்லது. ஒரு சில எவர்சில்வர் பாத்திரங்களில் கூட இரும்பு கலக்கப்படுவது உண்டு. கந்தகம் வைத்தால் இரும்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். இந்த மாதிரியான எவர்சில்வர் பாத்திரங்களை கூட ஒருவரிடம் இருந்து நாம் இனமாகவோ, பரிசாகவோ வாங்கிக் கொள்ளக் கூடாது.

நம் வீட்டில் இல்லாத ஒரு பொருள் திடீரென நம் வீட்டிற்கு வரும் பொழுது வீட்டில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்வதை நாம் பல இடங்களில் உணர்ந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த பொருள் வந்த பிறகு தான் நமக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது என்று நினைத்திருப்போம். இத்தகைய விஷயங்கள் அனைத்தும் கிரகங்களால் நிகழ்பவை தான். எனவே ஒவ்வொரு பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்குவது நல்லது.

குறிப்பாக இரும்பு சார்ந்த பொருட்களில் இருந்து சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நீங்களும் யாருக்கும் இரும்பு பொருட்களை பரிசாகவோ, தானமாகவோ கொடுக்க கூடாது. பிறந்த வீட்டிலிருந்து பயன்படுத்திய பழைய பித்தளை விளக்குகளை கூட புகுந்த வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. நாம் அணிந்திருக்கும் ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. எனவே உலோகம் சார்ந்த பொருட்களை நீங்கள் அணியும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -