வெங்காயம், தக்காளி எதையும் சேர்க்காமல் பருப்பை வச்சு வித்தியாசமான இந்த குழம்பை நிமிடத்தில் ரெடி பண்ணிடலாம். சுட சுட சாதத்தோடு வெறும் அப்பளம் மட்டும் இருந்தா போதும், தட்டு சோறும் நிமிஷத்துல காலி ஆயிடும்.

- Advertisement -

பருப்பு குழம்பு அனைவருக்குமே தெரிந்த, பிடித்த ஒன்று தான். சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பருப்பு குழம்பு என்றால் ஒரு அலாதி பிரியம் தான். இந்த பருப்பு குழம்பையே பல வகையில் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் பருப்பு, தேங்காய் மட்டும் வைத்து மிக மிக சுவையாக அதே நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ஒரு பருப்பு குழம்பை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1/2 கப், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 6 பல், தேங்காய் – 1/2 மூடி, காய்ந்த மிளகாய் – 2, சீரகம் -1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை -1 கொத்து.

- Advertisement -

செய்முறை

இந்தக் குழம்பை தாளிப்பதற்கு முதலில் பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிய பிறகு, குக்கரில் சேர்த்து அரைக் கப் பருப்பிற்கு ஒன்றரைக் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மட்டும் சேர்த்து நாலு விசில் வரும் வரை விட்டு விடுங்கள்.

இப்போது இந்த குழம்பிற்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்ளலாம். அரை முடி தேங்காய் சின்னதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து முதலில் ஒரு சுற்று விடுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குக்கர் நாலு விசில் வந்து உடன் அடுப்பை அணைத்து விட்டு, விசில் இறங்கியவுடன் மூடியை திறந்து அரைத்த மசாலாவை அதில் ஊற்றி அத்துடன் ஒரு கொத்து கறிவேப்பிலையும், உப்பையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து பருப்பு, மசாலா கலந்த குழம்பை 5 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். கடைசியாக இறக்கும் போது இரண்டு ஸ்பூன் நெய் விட்டு இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் பருப்பு குழம்பு அருமையாக தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: பாரம்பரிய சுவையில் முந்திரி கொத்து இப்படி செய்யுங்க! பக்குவம் தவறவே தவறாது.

இதை தாளிக்க வேண்டுமென்று அவசியமில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாளித்துக் கொள்ளுங்கள். அப்படியே சுட சுட சாதத்துடன் இந்த குழம்பை ஊற்றி, வெறும் அப்பளத்துடன் இதை சாப்பிட்டால் போதும். தட்டு சாதம் கூட காலியாவது தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும் செய்வதும் அவ்வளவு சுலபம்.

- Advertisement -