வீட்டிலேயே இத்தாலிய பாஸ்தா செய்யும் எளிய முறை

paastha

பாஸ்தா இதுவும் ஒரு டிபன் மற்றும் மாலை நேர உணவு வகையாகும். மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. இந்த பதிவில் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

paastha 2

பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்தா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 2
தக்காளி -4
கேரட் – 1/2 கப்
குடை மிளகாய் – 1/4 கப்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

பாஸ்தா செய்முறை:

முதலில் ஒரு கடாயில் தண்ணீரை சுட வைத்து அது நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து அதனுடன் பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும். பிறகு அதனை தனியாக எடுத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

paastha 3

- Advertisement -

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நசுக்கிகிய பூண்டு, இஞ்சி சேர்த்து கூடவே வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பிறகு அதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூடி நன்றாக வேகவைத்து கொள்ளவும். இவையனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பாஸ்தா தயார்.

paastha 4

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
சுவையான சாம்பார் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Pasta recipe in Tamil. It is also called Pasta ingredients in Tamil or Pasta preparation in Tamil or Pasta seimurai in Tamil or Pasta seivadhu eppadi in Tamil.