- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஒரே ஒரு கப் பாஸ்தா இருந்தா போதும் உங்க குழந்தைங்க விரும்பி சாப்பிடும் ருசியான சாட்...

ஒரே ஒரு கப் பாஸ்தா இருந்தா போதும் உங்க குழந்தைங்க விரும்பி சாப்பிடும் ருசியான சாட் பாஸ்தாவை இப்படி சாஸ்சுடன் செய்து கொடுத்து அசத்துங்க, அப்புறம் வீட்ல உங்க ரேஞ்சே வேற லெவல் தான்.

- Advertisement -

குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் போதும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் குழந்தைகள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகள் விதவிதமாக வெவ்வேறு ருசியிலும் இருக்கிறது. அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் வகைகளை நாம் செய்து கொடுப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமே கிடையாது. அந்த வகையில் இப்பொழுதெல்லாம் இந்த பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற வகைகளை குழந்தைகள் அதிகம் விரும்பிகிறார்கள். இப்பொழுது பாஸ்தாவை வைத்து தான் இந்த ஸ்நாக்ஸ் செய்யப் போகிறோம். அதனுடன் மசாலா, சாஸ் எல்லாம் சேர்த்து செய்து கொடுக்கும் போது குழந்தைகள் சத்தம் இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். வாங்க இந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் பாஸ்தாவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள், தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், எடுத்து வைத்த பாஸ்தாவை அதில் சேர்த்து அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள் (எண்ணெய் சேர்க்கும் போது பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வேகும்). பாஸ்தா வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி தண்ணீர் இல்லாமல் இருத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த பாஸ்தாவிற்கான மசாலாக்களை தயார் செய்து விடுவோம். ஒரு டீஸ்பூன் அமச்ஞர் பவுடர் (காய்ந்த மாங்காய் தூள்)ஒரு டீஸ்பூன், சாட் மசாலா ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன் ,மிளகு கால் டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை இவையெல்லாம் ஒரு பவுலில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதற்கு சாஸ் தயார் செய்து கொள்வோம் அதற்கு ஒரு கைப்பிடி கொத்தமல்லியும், ஒரு கைப்பிடி புதினாவையும் நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் அரைக்கப் தயிர் ஊற்றி மிளகுத் தூள் 1/4 டீஸ்பூன், உப்பு 1/4 ஸ்பூன் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து இதையும் தனியாக ஒரு பவுலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது தண்ணீர் வடிந்து இருக்கும் பாஸ்தாவை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் அரை டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு, அரை டேபிள் ஸ்பூன் மைதா மாவு, இரண்டையும் பாஸ்தாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பாஸ்தாவுடன் இந்த மாவு எல்லாம் நன்றாக ஒட்டி இருக்க அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன், பாஸ்தாவை எண்ணெயில் போட்டு நல்ல மொறு மொறுப்பாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பொறித்து எடுத்த பாஸ்தாவில் நாம் ஏற்கனவே கலந்து வைத்த மசாலா பவுடரை இதில் சேர்த்து நன்றாக குலுக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் கிரிஸ்பியான பாஸ்தா ஸ்நாக்ஸ் தயாராகி விட்டது.

இதை நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த புதினா கொத்துமல்லி சாஸுடன் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளும் இப்போதெல்லாம் இது போன்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள். இந்த முறையில் நீங்கள் செய்து கொடுக்கும் போது குழந்தைகள் வெளியில் வாங்கி தர சொல்லி கேட்கவே மாட்டார்கள் நீங்களும் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.

சற்று முன்