பணத்தை இந்தப் பொருளோடு சேர்த்து, இப்படி சுருட்டி மடித்து வைத்தாலே போதும். எந்த சூழ்நிலையிலும் எங்கிருக்கும் பணமும், உங்களைத் தேடி வரும்.

cash-pattai

இன்றைய சூழ்நிலையில் நமக்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கே பணப் பற்றாக்குறை இருந்து வருகின்றது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் பிரச்சனையால், மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். அத்தியாவசியமான தேவைகளுக்கு கூட பணத் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகின்றது. நம்மை சுற்றி எவ்வளவு தான் கஷ்டங்கள் அதி தீவிரமாக இருந்தாலும், அந்தக் கஷ்டத்திலும் நமக்கு பணப்புழக்கம் இருக்க வேண்டுமென்றால், தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money4

வரக்கூடிய காலகட்டத்தில் பணத் தட்டுப்பாடு என்பது இன்னும் அதிகரிக்குமே தவிர, கஷ்டங்கள் அவ்வளவு சுலபமாக குறையப்போவதில்லை. நேரமும் காலமும் சூழ்நிலையும் இந்த உலகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றது‌. நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம் தேவைக்கு ஏற்ப பொருளாதார வசதிகளை நாம்தான் மேம்படுத்திக் கொள்ளவேண்டும். நம்முடைய விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் சேர்த்து சில பரிகாரங்களை செய்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பார்ப்பதில் தவறில்லை.

வாசனை மிகுந்த பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி கட்டாயம் உள்ளது. இதை யார் நம்பினாலும், யார் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை. நம்பிக்கை இல்லாதவர்கள் பரிகாரத்தை செய்ய வேண்டாம். நிச்சயம் பலன் அளிக்காது. எந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் ஆன்மீக ரீதியாக பூஜை அறையில் வைத்து செய்வது அதனுடைய பலனை இரட்டிப்பாக்கும்.

pattai

முதலில் நீளவாக்கில் இருக்கும் ஒரு பட்டை துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ரூபாய் நோட்டுக்கு உள்பக்கத்தில் வைத்து, அந்த பட்டையோடு சேர்த்து ரூபாய் நோட்டை சுருட்டிக் கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டை, பட்டைக்கு மேலே சுருட்டி இருப்பீர்கள். அந்த நோட்டு பட்டையில் இருந்து பிரிந்த வராமல் இருக்க, அதன் மேல் ஒரு நூலைப் போட்டு கட்ட வேண்டும்.

- Advertisement -

நாட்டு மருந்துக் கடைகளில் வெள்ளெருக்கு நார் என்று கேட்டால் கிடைக்கும். அந்த வெள்ளெருக்கு நாரை அந்த ரூபாய் நோட்டின் மேல் கட்டிவிட வேண்டும். பணத்தை சுருட்டி தயார் செய்த இந்தப் பட்டையை, பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் பணம் வைக்கக்கூடிய டப்பாவிலும் வைத்துக் கொள்ளலாம்.

velleruku-kayaru

‘கட்டாயம் பணம் உங்களைத் தேடி வரும்’ என்ற எண்ணத்தோடு இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் பணப் பெட்டியைத் தேடி, பணம் ஏதாவது ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் பட்டையைக் கொண்டு போய் பணப்பெட்டியில் அப்படியே வைத்து விடுவார்கள். பட்டையை ரூபாய் நோட்டில் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு வைத்திருப்பார்கள்.

money1

ஆனால் இதையெல்லாம் தவிர்த்து விட்டு, அந்த பட்டையோடு வெள்ளெருக்கு நாரைக் கொண்டு ரூபாய் நோட்டை கட்டி பாருங்கள். பணம் உங்களை விட்டு எங்கும் செல்லாமல் உங்களிடமே தங்கும்.  பட்டையும் பணத்தை வசீகரிக்க கூடிய தன்மையை கொண்டது. பணத்தை உங்கள் பக்கம் ஈர்க்க இது ஒரு சுலபமான பரிகாரம். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.