அழகை மேம்படுத்தும் அழகு குறிப்புகள்

natural beauty tips
- Advertisement -

அந்த காலத்தில் இருந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி, அழகாக இருந்ததற்கு என்ன காரணம் என்று தெரியுமா.? அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புகள் தான். அதுவும் அவர்களது சரும பராமரிப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் தான். எனவே நாம் இப்பொழுது அத்தகைய சிறப்பு வாய்ந்த பாட்டி சொன்ன இயற்கை அழகு குறிப்புகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்க உள்ளோம்.

நம்முடைய முன்னோர்கள் யாரும் முட்டாள்கள் அல்ல மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பல மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை கண்டறிந்து அதை பயன்படுத்தி அதனால் பலன் அடைந்தவர்களே அதை பிற்கால சங்கதிகளுக்கு கூறியும் இருக்கிறார்கள் ஆனால் அவை அனைத்தையும் மூடப்பழக்கம் என்று இன்றைய தலைமுறையினர் ஒதுக்கிவிட்டு அதையே நவநாகரீகமாக பியூட்டி பார்லரில் சென்று பயன்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும். எலுமிச்சை சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

- Advertisement -

உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். தினமும் முகத்தை 3 அல்லது 4 முறை குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டிக்கொண்டு அந்த வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக அமர்ந்திருக்கவும். இவ்வாறு அமர்ந்திருப்பதினால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்கள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தை பளபளப்பாக்கும் தயிர்

இவ்வாறு அந்த கால கட்டங்களில் வழி வழியாக நம் முன்னோர்கள் அழகிற்காக பயன்படுத்தியதை தான் இப்போது நாம் நூற்றுக்கணக்கில் செலவுசெய்து பியூட்டி பார்லர் சென்று செய்து கொள்கிறோம். வீட்டிலேயே எளிதாக செய்து முடிக்க முடியும் இத்தகைய விஷயங்களுக்கு ஏன் ஆடம்பர செலவு? இப்படிபட்ட இந்த கேள்வி பலருக்கும் இருக்கும் இருந்தாலும் இதனை முறையாக எப்படி செய்ய வேண்டும், எதை செய்தால் என்ன பலன் என்று தெரியாமல் இருப்பர். அப்படிபட்டவர்களுக்காகவே தான் இந்த தொகுப்பு. இதனை பார்த்து விட்டு உங்கள் ஆடம்பர செலவை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து பயன் அடைவீர்கள் என்று கூறி இந்த தொகுப்பினை நிறைவு செய்கிறோம்.

- Advertisement -