வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு வரவேக்கூடாத 2 பிரச்சினைகள் எந்த தோஷத்தினால் வருகிறது தெரியுமா? தெரிந்தால் இனி அந்த தவறை செய்யவே மாட்டீர்கள்!

birds-medicine

ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் வரவே கூடாத இரண்டு பிரச்சினைகள் உண்டு. அந்த இரண்டு பிரச்சினைகளும் வருவதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்கிறது சாஸ்திரம். மனிதன் பிறந்ததன் நோக்கம் அவரவர்களுக்கு உரிய சுதந்திரத்தை அனுபவித்து வாழ்வதற்கு தான். தானும் மகிழ்வுடன் இருந்து, தன்னுடன் இருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருப்பது தான் உண்மையான மனிதம். அந்த இரண்டு பிரச்சினைகள் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

birds

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமை உண்டு. ஒருவருக்காக இன்னொருவர் தன்னுடைய சுதந்திரத்தை தியாகம் செய்வதை அன்பு எனப்படுகிறது. இவற்றை மனமுவந்து செய்யும் பொழுது யாருக்கும் பிரச்சனை ஏற்படுவது இல்லை ஆனால் வலுக்கட்டாயமாக நடைபெறும் பொழுது தான் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கிறது. சுதந்திரம் என்பது மனிதருக்கு மட்டுமல்ல! பறவைகள், விலங்குகள் என்று அனைத்து உயிர்களுக்கும் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் தத்தம் வாழ்வில் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் இருப்பதற்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும் பொழுது நாம் செய்யும் இந்த தவறு நம்முடைய இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் நமக்கு தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது என்று சாஸ்திரம் வலுவாக எடுத்துரைக்கிறது.

ஒரு மனிதன் எந்த பிரச்சனைகளையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பது என்பது மிகுந்த மோசமான பரிதாப நிலை ஆகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நீங்கள் கோடி கோடியாக பணம் வைத்திருந்தாலும் உங்களிடம் நோய்கள் இருந்தால் அந்த பணம் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். ஆனால் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்தாலும் நோயே இல்லாமல் இருப்பது தான் உண்மையான கோடீஸ்வரனுக்கு அர்த்தமாகும். ஆகவே பணத்தைக் கொடுத்து நோயை சரி செய்து விட முடியாது. நோய் இல்லாமல் வாழ்வது நம் கையில் உள்ளது.

birds

நாம் அறியாமல் செய்யும் சில தவறுகளால் இது போன்ற சூழ்நிலையை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்கு தான் இந்த பதிவு. நோய் மட்டுமல்ல நம்முடைய சுதந்திரத்தை கெடுக்கும் வகையில் சிறைக்கு செல்வது கூட பரிதாப நிலை தான். இந்த தவறை நாம் செய்யும் பொழுது சிறைவாசம் அனுபவிப்பது அல்லது படுத்த படுக்கையாக நோய்வாய் படுவது போன்ற துன்பங்கள் ஏற்படுகிறது என்பதை கேட்கும் பொழுதே நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மனிதனுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் சுதந்திரம் உண்டு என்று சொன்னது இதற்காக தான். எந்த ஒரு பறவை இனத்தையும் வீட்டில் அடைத்து வைப்பது என்பது தோஷத்திற்கு உரியது. பறவைகளுக்கும் சுதந்திரம் உண்டு. அதனை பறக்க விடுவதற்கு தான் இறக்கைகள் உள்ளன. நீங்கள் பறவைகளை வளர்க்க நினைத்தால் அதனை சுதந்திரமாக வளர்த்து பாருங்கள். அதை விடுத்து கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய கூடாது. இப்படி பறவைகளையும், விலங்குகளையும் கட்டி வைத்து சித்திரவதை செய்யும் பொழுது அடுத்த பிறவியில் உங்களுக்கு சிறைவாசம் அனுபவிப்பது அல்லது படுத்த படுக்கையாக நோய் வாய்பட்டு கிடப்பது போன்ற கொடுமைகள் நடைபெறும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம்.

medicine

பாவம், புண்ணியத்தின் அர்த்தம் தெரியுமா? ஒருவரது மனம் புண்படும்படி நடந்து கொள்வது பாவத்திலும், ஒருவர் நமக்கு நன்றாக வாழ வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்வது புண்ணியத்திலும் சேர்கிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல! அனைத்து ஜீவராசிகளுக்கு உதவி செய்வதும், அவற்றை சுதந்திரமாக விடுவதும் புண்ணியத்தை சேர்க்கும். உங்கள் கண்களுக்குத் தென்படும் எந்த ஜீவராசிகளுக்கும் துன்பம் நேரும் பொழுது ஓடி போய் உதவி செய்யுங்கள். புண்ணிய கணக்கு பன்மடங்கு பெருகும்! நோயில்லா வாழ்வு அமையும்!