- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும். இனி பழைய சாதத்தையும் வீணாக்காமல் சுவையாக சாப்பிடலாம்.

இந்த டிப்ஸ் தெரிந்தால் போதும். இனி பழைய சாதத்தையும் வீணாக்காமல் சுவையாக சாப்பிடலாம்.

- Advertisement -

வீடுகளில் சாப்பிடுவதற்காக சமைக்கும் சாதத்தினை எவ்வளவு தான் அளவாக சமைத்தாலும், சில நேரங்களில் மீதியாவது என்பது வழக்கம்தான். இவ்வாறு மீதியாகும் சாதத்தை அப்படியே வைத்து விட்டால் அது வினாகி கெட்டு விடும். இப்படி சாதத்தை வீணாக்குவது என்பது குடும்பத்திற்கு நல்லதல்ல என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இவ்வாறு மீதமான சாதத்தை எப்படி பதப்படுத்தி, சுவையாக சமைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சாதம் மீதியான அன்று இரவே ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து, புளிச் சாறு எடுத்து அதனை சாதத்தில் ஊற்றி கலந்து விடவேண்டும். அவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு இரவு முழுவதும் நன்றாக ஊற விடவேண்டும்.

- Advertisement -

தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 5 ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், முந்திரி – 10, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

kadai

அடுப்பில் கடாயை வைத்து, கடாய் சூடானதும் அதில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் கடுகு மற்றும் கடலை பருப்பு சேர்க்க வேண்டும். இவை நன்றாக பொரிந்ததும் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை, 10 முந்திரிப் பருப்புகள் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் புளிக்கரைசலை சேர்த்து, ஊறவைத்த சாதத்தையும் சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தும் சாதத்துடன் சேர்ந்து நன்றாக கலந்து வரும் வரை கிளறி விடவேண்டும். 5 நிமிடங்கள் அப்படியே விட்டு, விட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

sadham

அத்துடன் தொட்டுக்கொள்ள தேங்காய் துவையலை அரைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு ஸ்பூன் தேங்காய் துருவல், நான்கு சின்ன வெங்காயம், ஐந்து வரமிளகாய், சிறிய துண்டு இஞ்சி, சிறிய துண்டு புளி, ஒரு கொத்து கருவேப்பிலை, அரை ஸ்பூன் உப்பு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.

sadham

இப்பொழுது தாளித்து சாதத்துடன் இந்தத் துவையலை சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும். இந்த சாதத்தையும் துவையலையும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தால் யாருக்குமே தெரியாது இதனை நீங்கள் பழைய சாதத்தில் தான் செய்தீர்கள் என்று. எனவே இனிமேல் பழைய சாதத்தை வீணாக்காமல் இவ்வாறு சமைத்துக் கொடுங்கள். பணத்தையும் சேமிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வீணாகும் சாதத்தை கீழே கொட்டும்போது வரும் மன சங்கடத்தையும் தவிர்க்கலாம்.

சற்று முன்