பழைய சாதம் ஹேர் பேக்

pazhaya sadam hair pack
- Advertisement -

தலைமுடி உதிராமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பல ஹேர் பேக்கை பயன்படுத்துவார்கள். அந்த ஹேர் பேக்குகளை பயன்படுத்துவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் சிரமப்படும் சூழ்நிலையும் உண்டாகும். ஆனால் இந்த அழகு குறிப்பு பதிவில் சிரமமே இல்லாமல் பழைய சாதத்தை வைத்து எந்த முறையில் ஹேர் பேக் போட்டால் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறிய சாதத்தை தான் நம் பழைய சாதம் என்று கூறுகிறோம். பழைய சாதத்தில் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த பழைய சாதத்தை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட பழைய சாதத்துடன் இரண்டே இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்து நம்முடைய தலைக்கு நாம் தேய்ப்பதன் மூலம் நம்முடைய தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்பொழுது பழைய சாத ஹேர் பேக்கை தயார் செய்வதை பற்றி பார்ப்போம்.

மூன்று ஸ்பூன் அளவிற்கு பழைய சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் துருவிய தேங்காய் மூன்று ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு விளக்கு எண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணையை சேர்க்க வேண்டும். இதை பேக்காக தயார் செய்வதற்கு பழைய சாத தண்ணீரை ஊற்றி அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவி 20 நிமிடம் மட்டும் ஊற வைக்க வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடலாம்.

- Advertisement -

இதில் இருக்கக்கூடிய இந்த பழைய சாதத்தில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தேங்காயை கூறவே வேண்டாம். கேரளாவை சேர்ந்த அனைத்து பெண்களின் கூந்தல் ரகசியத்தில் தேங்காய் ஒரு இன்றியமையாத பொருளாக திகழ்கிறது. தேங்காயில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நம் தலைமுடிக்கு ஏற்பட்டு தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றுவிடும்.

அடுத்ததாக இதில் சேர்த்த பொருளாக ஆமணக்கு எண்ணெய் திகழ்கிறது. ஆமணக்கு எண்ணெய் என்பது முடி வளர்ச்சியை தூண்டக் கூடியதாகவும், முடியை கருமையாக வளர செய்வதற்கும் உதவக் கூடியதாகவும் திகழ்கிறது. குளிர்ச்சி மிகுந்த உடல்வாகு கொண்டவர்கள் ஆமணக்கு எண்ணையின் அளவை மட்டும் சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் இந்த ஹேர் பேக்கை நாம் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த ஹேர் பேக்கை நாம் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையிலேயே ஹேர் கண்டிஷனர் போட்டது போல் கூந்தல் மென்மையாகவும் பட்டுப்போலவும் மிளிர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தை தங்கம் போல மின்ன வைக்கும் தக்காளி

வீட்டில் இருக்கக் கூடிய இந்த எளிமையான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாகவும் கருமையாகவும் பட்டுப்போல மிளிர வைக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -