எல்லா பெண்களுக்கும் நினைத்த வாழ்க்கை அமைவது கிடையாது. அமைந்த வாழ்க்கையை அமைதியாக ஏற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம் ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும் பெண்களும் ஏராளம் இருக்கின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு நிறைய வகையான தோஷங்கள் காரணமாக அமைந்துவிடுகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இப்படியான எல்லா தோஷங்களையும் போக்குவதற்கு மிகச்சிறந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பெண்களுக்கு உரிய தோஷங்களை போக்குவதற்கு அம்பாளை வழிபடுவது முறையாகும். ஒரு பெண்ணிற்கு எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், தாயை விட சிறந்த சக்தி எதுவுமே இருக்க முடியாது. பெண்களுக்கு இருக்கும் தோஷங்கள், பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்னல்களில் இருந்து தாயின் ஸ்ரூபமாக இருக்கக் கூடிய அம்பாள் காத்தருளுகிறாள் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் வாழ்க்கையில் இருக்கும். சிலருக்கு திருமணமே பிரச்சினையாக இருக்கும். திருமண தடைகள் இருக்கும், திருமணம் தள்ளி சென்று கொண்டே இருக்கும், நல்ல வரன் அமைவதில்லை, அமைந்த வரணும் நிலைப்பதில்லை, வயதும் ஏறிக் கொண்டே இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, திருமணமான பெண்களுக்கு கணவனால் பிரச்சனை, மாமியாரால்.. நாத்தனாரால் பிரச்சனை, குடும்ப பிரச்சனை என்று நிம்மதி இல்லாத வாழ்க்கை அமைந்திருக்கும். இப்படி எல்லா வகையான பெண்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு இப்பரிகாரம் நல்ல தீர்வாக இருக்கும்.
11 வாரங்கள் தெப்பக்குளம் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். ஒவ்வொரு வாரம் செல்லும் பொழுதும், ஒவ்வொரு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தெப்பக்குளம் சென்றதும், அங்குள்ள குளத்தில் இருந்து தண்ணீரை தெளித்து உடல் முழுவதும் நீராடி ஈரமாக்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற உடையை உடுத்திக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் மஞ்சள் நிற தாவணி அணியலாம். திருமணமானவர்கள் மஞ்சள் நிற சேலை அணிந்து கொள்ளுங்கள்.
ஈர ஆடை உடன் பிரகாரத்தை கொடி மரத்திலிருந்து ஆரம்பித்து, மூன்று முறை அங்கபிரதக்ஷணம் செய்து வழிபட வேண்டும். “ஓம் சக்தி” என்று சொல்லிக் கொண்டே வேண்டுதலை வைத்து வழிபட்ட பின்பு, அம்பாளிடம் மனதார உங்களுடைய பிரார்த்தனையை வையுங்கள். பின்பு நெய் விளக்கு ஏற்றி வைத்து வணங்குங்கள். இது போல ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வந்தால் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எப்பேர்ப்பட்ட தோஷங்கள் இருந்தாலும் அவை நிவர்த்தி ஆகிவிடும் என்பது ஐதீகம். பெண்களின் பிரார்த்தனைகளுக்கு எப்பொழுதும் அம்பாள் உடனே செவி சாய்ப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.
இதையும் படிக்கலாமே:
விஜயதசமி புது துவக்கம் 2024
இந்த முறையில் நீங்கள் அங்கப்பிரதக்ஷணம் செய்து 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால், உங்களை துரத்திக் கொண்டிருக்கும் எல்லா பிரச்சனைகளும் உங்களை விட்டு உடனே நீங்கும். வாழ்க்கையே வெறுத்து போனவர்கள், விரும்பி வாழ்வதற்கான எல்லா வழிகளையும் அம்பாள் ஏற்படுத்திக் கொடுப்பார். சக்தி வாய்ந்த அம்மன் கோவிலுக்கு சென்று இந்த முறையில் வழிபடுங்கள். முத்துமாரியம்மன், தேவி கருமாரி அம்மன் போன்ற அம்மன் கோவில்களுக்கு சென்று பெண்கள் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வந்தால், தீராத துன்பங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.