கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராமல் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று தெரியுமா?

couple-marraige-mangalyam
- Advertisement -

ஒரு குடும்பத்தில் பெண்கள் பொறுப்பேற்றால் அந்த குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அன்போடு, அரவணைத்து சென்றால் அந்த குடும்பம் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் தொடர்ந்து நிம்மதியுடன் இருக்கும். ஆண் ஆதிக்கம் செலுத்தி, பெண்களுடைய கண்ணீர் எப்பொழுதும் இல்லத்தில் விழுந்து கொண்டிருந்தால் அந்த குடும்பத்தில் வறுமையும், நிம்மதி இன்மையும் தாண்டவமாடும். கணவனின் ஆயுளும், குடும்பத்தில் செல்வ வளமும் பெருக பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பெண்கள் எப்பொழுதும் தங்களுடைய மாங்கல்யத்தில் குங்குமம் வைத்துக் கொள்வது குடும்பத்தில் சுபிட்சத்தை கொடுக்கும். நெற்றியிலும், முன் வகிட்டிற்கு நடுவிலும் குளித்ததும் பூஜை அறையில் கிழக்கு முகமாக நின்று குங்குமத்தை அணிந்து கொள்ள வேண்டும். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவது நிச்சயம் குறையும்.

- Advertisement -

இன்றைய நவீன யுக பெண்கள் மாங்கல்ய சரட்டை சாதாரண அணிகலன்களை போல கழட்டி வைத்து விட்டு வேலையைப் பார்க்கிறார்கள். மாங்கல்யம் என்பது மங்கலப் பொருளாகும். திருமாங்கல்ய சரடு எப்பொழுதும் மஞ்சள் நூலால் கோர்க்கப்பட்டு இருக்க வேண்டும். முழுவதுமாக சரடு அணிவதை தவிர்க்கவும். மாங்கல்யம் எப்பொழுதும் உங்கள் கழுத்திலேயே இருப்பது கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும். அடிக்கடி கழற்றி வைத்தால் அந்த உறவுக்குள் விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

காலையில் எழுந்ததும் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் சமையலை ஆரம்பிக்கும் முன்பு அடுப்பை பற்றி வைத்து அக்னி பகவானை மனதார பிரார்த்திக்க வேண்டும். சாப்பிடும் உணவு குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தான் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும். பெண்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது மாலை வேளையில் அரச மரத்தை வலம் வரக்கூடாது. கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் எண்ணெய் மீதம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வரக்கூடாது. எண்ணெயை அடுத்தவர்களுடைய விளக்கில் எக்காரணம் கொண்டும் ஊற்றக்கூடாது. கோவிலில் இருக்கும் விளக்கு அல்லது நீங்கள் புதிதாக வாங்கிக் கொண்டு செல்லும் விளக்கில் மட்டுமே எண்ணெய் ஊற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எந்த ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இல்லை. அடுத்தவர்களுடைய பார்வைக்கு நெருடலாக இருக்கும் படியோ அல்லது ரொம்பவும் லூசாக இருக்கும் ஆடைகளையோ அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சேலை அணிந்து கொள்ளும் பெண்கள் முந்தானையை தொங்கவிட்டு திரியக்கூடாது. முந்தானையை இழுத்துப் பிடித்து சொருகிக் கொண்டு வேலையை செய்ய வேண்டும். முந்தானை ஆடிக் கொண்டிருந்தால், குடும்பமும் ஆடி போய்விடும் என்று சொல்வது வழக்கம். பரிமாறும் பொழுது முந்தானையை சொருகிக் கொண்டு சாப்பாடு பரிமாற வேண்டும், அப்போது தான் செய்யும் காரியம் சிதறாமல் இருக்கும்.

காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது தெற்கு திசையை நோக்கி நீங்கள் கோலம் போடக்கூடாது. அதே போல கோலம் போட்டு முடிக்கும் பொழுது தெற்கு திசையில் கோலமானது முடிவடைய கூடாது. இது குடும்பத்தில் வறுமையை உண்டாகும். பெண்கள் கோவில்களில் சாஷ்டாங்கமாக முழு உடல் படும்படி கட்டாயம் விழுந்து வணங்கக் கூடாது. முட்டி போட்டு பின்னங்கால்களை ஒன்றாக வைத்து முன்நெற்றி தரையில் பட இறைவனை வணங்க வேண்டும். மாங்கல்ய பலம் நிலைத்திருக்க பெண்கள் எப்பொழுதும் குளிக்கும் போது தெற்கு முகமாக பார்த்து மஞ்சள் பூசி குளிக்க வேண்டும். குறிப்பாக ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து தேய்த்து, முகத்தில் மஞ்சள் பூசி குளித்து அம்மனை மனதார வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா தடைகளும் அகன்று சுபீட்சம் நிலைக்கும், கணவனின் ஆயுளும் நீடிக்கும்.

- Advertisement -