சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களை பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும். அவர்கள் உடம்பில் இருக்கும் தரித்திரம் தானாக வெளியேறி, உடல் சுறுசுறுப்பாகும்.

kitchen

பெண்கள் என்றாலே வாழ்க்கையில் அவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில், பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைக்கு சுலபமான ஒரு தீர்வை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சரி, அந்த பிரச்சனை என்ன என்பதை முதலில் இப்போது தெரிந்து கொள்வோம். நிறையப் பெண்களுக்கு மனதளவில் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்று மூளை சொல்லும். ஆனால் உடல் ஒத்துழைக்காது. உடல் சோர்வு, உடல் அசதி, சோம்பேறித்தனம் நம்மை போட்டு அழுத்தி விடும். எந்த வேலையுமே செய்ய விடாது.

women8

இப்படிப்பட்ட பிரச்சனை ஆண்களுக்கும் இருப்பது இயற்கை தான். இருப்பினும் ஆண்களை ஒப்பிடும்போது, வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், இப்படி பொதுவாக பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். இதை தீர்க்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உடல் சுறுசுறுப்பை மேம்படுத்த, வீட்டில் இருக்கக்கூடிய, நம் சமையலறையில் இருக்கக்கூடிய எந்த பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும்? பார்த்து விடுவோமா?

அந்த மூன்று முக்கியமான பொருள் ஏலக்காய், லவங்கம், மிளகு இவ்வளவு தான். இது நம் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்கும். மூன்று ஏலக்காய்களை தோல் நீக்கி விடலாம். முடிந்தால் தோளோடு சாப்பிடலாம். ஆனால் ஆரோக்கியத்திற்கு உள்ளே இருக்கும் அந்த கருப்பு நிற பருப்புகளை மட்டும் வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தண்ணீர் குடித்து விட்டால் போதும்.

இதேபோல் தான் மூன்று லவங்கங்கங்களை எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டால் போதும். சில பேருக்கு லவங்கம் வாசம் பிடிக்காது. இருப்பினும் உடல் ஆரோக்கியத்திற்காக மருந்து மாத்திரை சாப்பிடுவதாக நினைத்து, சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை.

- Advertisement -

இதேபோல் 5 அல்லது 9 மிளகுகளை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டால் போதும். மூன்றையும் ஒன்றாக சாப்பிட முடியவில்லை என்றால் தனித்தனியாக இந்த பொருட்களை சாப்பிடுவதிலும் தவறு இல்லை. காலை மாலை மதியம் எப்போது வேண்டுமென்றாலும், உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது இதை செய்து பாருங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்துவிட்டு பலன் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் பலன் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு கிடையாது.

krambu

உங்களையும் அறியாமல் உங்கள் உடம்பிற்குள் இருக்கும் வியாதிகள் கூட அடித்து விரட்டப் படும். இதை நீங்கள் ஆன்மீக ரீதியாக நினைத்து செய்தாலும் சரிதான். உடலுக்கு ஆரோக்கிய ரீதியாக நினைத்து செய்தாலும் சரிதான்.

Milagu benefits in Tamil

உடம்பிலிருக்கும் சோம்பேறித்தனம் நீங்கினால், உங்களை பிடித்த சோம்பல் நீங்கினால், உங்கள் உடம்பில் இருக்கும் மூதேவி, பீடை தானாக வெளியேறி விடும். நீங்கள் வேலை செய்யும் விதத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.