இந்த செயின் மட்டும் பெண்களின் கழுத்தில் இருந்தால், அவர்களை யாராலும் தோற்கடித்து வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளவே முடியாது.

amman
- Advertisement -

பெண்கள் எப்போதும் மன உறுதியோடு, மன வலிமையோடு தான் இருக்க வேண்டும். அவர்களை அவ்வளவு சுலபத்தில் யாராலும் வீழ்த்தி விட முடியாது. அப்படிப்பட்ட பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கத்தான் இந்த பரிகாரம். இதை பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு விஷயம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றினால் அம்மனுக்கு நிகரான சக்தி நிச்சயம் உங்களுக்கும் கிடைக்கும். பெண்களுடைய கழுத்தில் இந்த செயின் இருக்க வேண்டும் அது எந்த செயின். சாமி டாலரா, மந்திரித்து தாயத்தா என்றெல்லாம் அதிகமாக யோசிக்காதீங்க. இது ஒரு மிக மிக எளிமையான குறிப்பு தான். உங்களுக்கு இந்த பதிவு முக்கியம் என்றால் உங்களுக்கும் இந்த குறிப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பதிவை தொடர்ந்து படித்து பயன் பெறலாம்.

அடுத்தவர்களால் பெண்கள் தோற்கடிக்கப்படக் கூடாது என்றால், பெண்கள் அதற்கு உண்டான தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திற்கும் அடுத்தவர்களை சார்ந்து இருக்கக் கூடாது. சொந்த காலில் நிற்கக்கூடிய பெண்களுக்கு எப்போதுமே மன பலம் தைரியம் அதிகமாக தான் இருக்கும். அதற்காக திமிருடன் நடக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. ‘யாரை சார்ந்து நான் வாழவில்லை. என் சொந்த காலில் உழைத்து சம்பாதித்து நான் வாழ்கின்றேன்’ என்ற கர்வம் ஒரு துளி பெண்களில் மனதில் இருந்தால் அது தவறும் கிடையாது. முதலில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக விஷயத்திற்கு வருவோம். பொதுவாகவே திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு சரடை மட்டும் தான் கழுத்தில் அணிந்திருப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் ஒரு சில பேர் பார்த்தீர்கள் என்றால், சரடுடன் சேர்த்து இன்னொரு செயின் கூட அணிந்து இருப்பார்கள். அதாவது ஒரே ஒரு செயின் கழுத்தில் இல்லாமல், கூட துணை செயின் ஒன்று இருக்கும். இரண்டு அணிகலன்கள். இப்படி ஜோடி அணிகலன்களாக ஒரு பெண் கழுத்தில் நகை அணிந்து இருந்தால், அந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும்.

உதாரணத்திற்கு நிறைய பெண்கள் கழுத்தில் மஞ்சள் கயிறில் சரடு போட்டு இருப்பார்கள். அதன் மேலே ஒரு செயின் போட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களுடைய சுபாவம் ஒரு மாதிரி இருக்கும். ஒரே ஒரு சரடு அணிந்திருக்கக்கூடிய பெண்களின் சுபாவம் வேறொரு மாதிரி இருக்கும். (நீங்கள் வேண்டும் என்றால், இந்த விஷயத்தை இனிமேல் பார்க்கக்கூடிய பெண்களிடத்தில் சோதனை செய்து பாருங்கள்.) ஒரே ஒரு சரடு அணிந்திருக்க கூடிய பெண்கள் கூடுதலாக ஒரு செயினை அணிந்துதான் பாருங்களேன். உங்களுடைய சுபாவத்தில் மாற்றம் ஏற்படும். உங்களுடைய துணிச்சல் மேம்படும். நீங்கள் எதிலும் வெற்றியாளராக மாறிவிடுவீர்கள்.

- Advertisement -

உள்கழுத்தில் அந்த துணை செயினை போட்டாலும் சரி, அல்லது நீளமாக துணை செயினை போட்டுக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். ஆனால் இரண்டு செயின் கழுத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். (அந்த காலத்தில் பாட்டிகள் எல்லாம் கூட, தாலி சரணோடு ரெட்ட வட செயின், அல்லது கோதுமை செயின் என்று விதவிதமாக செயின்களை போட்டிருக்கும்.) இந்த பரிகாரத்திற்கு உள்ளே போய் ஆராய்ச்சி செய்வதற்கெல்லாம் வேலை இல்லை. இதை அணிந்தாலே உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும்.

உதாரணத்துக்கு இன்னொரு விஷயம். அந்த காலத்தில் எல்லாம் அட்டிகை அணியாத பெண்களே இருக்க மாட்டார்கள். அம்மன் முதற்கொண்டு ஆடை அலங்காரங்களில், ஆரத்திற்கு மேலே அட்டிகை போட்டிருப்பது வழக்கம். தாலி சரடு போட்டு இருந்தாலும் சரி அல்லது திருமணம் ஆகாமல் சாதாரண செயின் அணிந்திருந்தாலும் சரி, உள் கழுத்தில் எப்போதும் ஒரு மாலை இருக்கும். ஒரு முத்துமாலை யாவது இருக்கும். அப்படி உள் கழுத்தில் அணியக்கூடிய அந்த அணிகலனுக்கு தனி சிறப்பு தான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த நகையை அணிந்த மூன்று மாதத்திற்குள்ளேயே உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

இப்படி இரண்டாவதாக அணியக்கூடிய அந்த நகையை தங்கத்தில் தான் போட வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. வெள்ளியில் போடலாம். செம்பில் போடலாம். முத்துமாலை ஆக கூட போடலாம். இந்த குறிப்பு உங்களுக்கு அழகு சேர்ப்பதோடு சேர்த்து, அதிர்ஷ்டத்தையும் கொடுக்க போகின்றது என்ற இந்த கருத்தோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -