அமெரிக்க அரசே தற்போது வெளியிட்ட பறக்கும் தட்டு வீடியோக்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள். குழப்பத்தில் உலக மக்கள்.

pentagon-ufo

அமெரிக்காவில் 2004 மற்றும் 2015 இல் தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்ட பறக்கும் தட்டு பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராலாகின. அந்த வீடியோவில் வேற்று கிரக வாசிகள் பயன்படுத்துவதாக சொல்லப்படும் பறக்கும் தட்டு போன்ற வித்தியாசமான வானியல் எந்திரம் போல் தோற்றம் அளிக்கும் வகையில் ஏதோ ஒரு பொருள் ஒன்று பறந்து கொண்டிருப்பதை அமெரிக்க கப்பற்படை வீரர்கள் சிலர் படம் பிடித்துள்ளதாக கூறப்பட்டது. அந்த வீடியோக்கள் வெளியானதிற்கு பிறகு அதை பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலும் அளிக்காமல், அமெரிக்க அரசு மௌனம் சாதித்தது. இதனால் உலக மக்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

parakkum-thattu

உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது பறக்கும் தட்டு தானா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா? என்று சர்ச்சைகள் கிளம்பின. இதனால் வதந்திகளும், கற்பனைகளும் வலைதளங்களில் தீயாய் பரவியது. இது குறித்த சந்தேகங்களுக்கு தற்போது விளக்கம் அளித்து அமெரிக்க அரசு திடுக்கிடும் தகவல் ஒன்றை அறிவித்துள்ளது. அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை பெறுப்பேற்கும் விதமாக மிகப்பெரிய இராணுவ தளம் ஒன்று கட்டப்பட்டது. 1943 இல் அதிவேகமாக ஐங்கோண வடிவில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் பென்டகன் என்று அழைக்கப்படும்.

pentagon

இந்த பென்டகன் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் UFO குறித்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்துள்ளது. UFO என்றால் (Unindentified flying object) என்று பொருள். அதாவது ‘அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்’ என்று அர்த்தம். இதை பென்டகன் இப்போது UAP என்று கூறியிருக்கிறது. UAP என்றால் (Unidentified aerial phenomenon) என்று பொருள். அதாவது ‘அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வு’ என்று அர்த்தம். என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு பொருள் வானில் இருப்பதை இது குறிக்கிறது.

- Advertisement -

இந்த வீடியோ பதிவை எடுத்த அமெரிக்க கப்பற்படை வீரர் ஒருவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘நாங்கள் படம் பிடிக்கும் போது இந்த பொருள் இதுவரை நாங்கள் காணாத வகையில் வெகு வேகமாக பயணம் செய்ததை உணர முடிந்தது. அது என்னவென்றே புரியாத வகையில் வித்யாசமாக இருந்தது’. வானில் தலைகீழாக திரும்பி சாகசம் செய்வது போல் இருந்தது என்று கூறியுள்ளனர். நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களுக்கும் இதே போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் நிச்சயம் எழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ufo

ஏற்கனவே அரசின் அனுமதியின்றி அதிகார பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோக்கள் தற்போது பென்டகன் அதிகார பூர்வமாகவே அறிவித்து இதனை உறுதி செய்துள்ளது. UFO வீடியோக்களில் மூன்று வீடியோவை மட்டும் பென்டகன் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இருப்பது அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வு தான் என்பதை உலக மக்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளது. இதனால் உலக மக்கள் பலரும் UFO குறித்த வதந்திகளில் இருந்து தெளிவு பெற்றுள்ளனர். எனினும் உலகம் இருக்கும் இந்த நிலையில் அமெரிக்க அரசு இதனை ஏன் வெளியிட வேண்டும்? என்ற புதிய குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

பென்டகன் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவு இதோ