இந்த தேதியில் பிறந்தவர்கள், இந்த நாட்களில் திருப்பதிக்கு சென்றால் கட்டாயம் குபேரராகும் யோகத்தை பெறலாம்.

tirupati
- Advertisement -

‘திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும்’ என்பது பொதுவான கருத்து. இது பல பேருக்கு பலித்திருக்கிறது என்றால் அது நிச்சயமாக பொய் ஆகாது. நம்மில் பலபேர் திருப்பதிக்கு சென்று வந்த பின்பு, நம் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து  இருப்போம். திருப்பதி வெங்கடாஜலபதியை, நினைத்த நேரத்தில், நினைத்த மார்கத்தில் சந்திப்பது கடினமாக இருந்தாலும், அதன் பலன் நமக்கு அதிகமாகவே இருக்கும்.

tirupathi0

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நம்முடைய ஜாதககட்டம் சரிவர இருப்பது அவசியம். நவக்கிரக கோள்களும் சரியான இடத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே வளமான வாழ்க்கையை பெற முடியும். இப்படி இருக்க எல்லா எல்லா வகைப்பட்ட ஜாதகக்காரர்களும் திருப்பதிக்கு சென்று வந்தால் மட்டும் எதற்காக திருப்பம் ஏற்படும், என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதை நாம் என்றாவது சிந்தித்து இருக்கின்றோமா? இந்த கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம்முடைய ஜாதகத்தில் சூரியனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று, தஞ்சாவூர் சூரியனாரை தரிசனம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். சந்திரனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால், திங்கள்கிழமை அன்று திங்களூர் சென்று சூரிய பகவானை வழிபட வேண்டும். புதனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் புதன்கிழமை அன்று திருவெங்காடு சென்று வழிபட வேண்டும். குருவின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் வியாழக்கிழமை அன்று திட்டை திருவாரூர் சென்று குரு பகவானை வழிபட வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் வெள்ளிக்கிழமை அன்று கஞ்சனூர் சென்று வழிபட வேண்டும். சனியின் ஆதிக்கம் குறைவாக இருந்தால் திருநள்ளாறு சென்று சனி கிழமை வழிபட வேண்டும். ராகு கேது ஜாதகத்தில் பிரச்சனை இருந்தால் திருநாகேஸ்வரம் செல்லவேண்டும் இது பல பேருக்கு தெரிந்திருக்கும்.

guru bagwan

ஆனால் உங்களுடைய ஜாதக கட்டத்தில் எப்படிப்பட்ட கிரகக்கோளாறு இருந்தாலும் அது, திருப்பதி பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த கிரகத்தின் ஆதிக்கம் சரியாக இல்லை என்றாலும் அது சரியாக இயங்கி, உங்களுக்கு வாழ்க்கையில் யோகம் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம். கட்டாயம் திருப்பதிக்குச சென்றால் எல்லா வகையான கிரகக்கோளாறு நீங்கி விடும் என்றுதான் சித்தர்களால் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையிலும், பெருமாள் வீற்றிருக்கும் மூலஸ்தானத்திலும் எல்லா கிரகங்களின் சக்தியும் ஆதிக்கமும் அதிகமாகவும், நேர்மறையாகவும் இருந்து கொண்டே இருக்கும். இதனால்தான் திருப்பதிக்கு சென்றால் திருப்பம் உண்டாகும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட கிரகக்கோளாறும் திருப்பதிக்குச் சென்றால் தீர்ந்து விடுகிறது அல்லவா? ஆனால் உங்களுடைய ஜாதகத்திற்கு எந்த கிரகம் ஆதிக்கம் பெற்று இருக்கிறது? அந்த கிரகத்திற்கு எந்த தினத்தில் செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டு செல்வதுதான் சிறப்பானது.

- Advertisement -

சிலர் தெரியாமலேயே, ‘அவர்களுடைய நேரம் நன்றாக இருந்திருக்கும். அவர்களுடைய ஜாதக கட்டத்திற்கு எந்த நாட்களில் செல்ல வேண்டும் என்று தெரிந்து இருக்காது. ஆனால் அந்த தினத்தில் எதிர்பாராமல் செல்லும்படியான சூழ்நிலை வந்து இருக்கும்.’ காலமும், நேரமும், சூழ்நிலையும் நன்றாக அமைந்ததால் திருப்பதிக்குச் சென்று வந்த பின்பு ராஜயோகத்தை அடைந்த பலபேர் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள். நீங்கள் எந்த கிழமையில் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

calendar

1, 10, 19, 28 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று பெருமாளை தரிசிக்க வேண்டும்.

2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திங்கள்கிழமை அஞ்சு பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

3, 12, 21, 30 இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

4, 7, 22, 31, 25, 16 இவர்கள் எந்த தேதியில் வேண்டுமென்றாலும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளி கிழமை பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் சனிக்கிழமை அன்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் புதன் கிழமை அன்று பெருமாளை தரிசனம் செய்யலாம்.

Perumal

இதுபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், ஏதாவது ஒரு திங்கட்கிழமை அன்று பெருமாளை தரிசனம் செய்து வரவேண்டும். 12 மாதங்களும், 12 திங்கட்கிழமைகளில் ஒரு முறை பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு குபேர யோகம் கிட்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாராக மூர்த்தியை தரிசனம் செய்த பின்னரே, பெருமாளை தரிசனம் செய்யவேண்டும். தினம்தோறும் பெருமாள், காலையும் மாலையும்  வாராக மூர்த்தியை தரிசனம் செய்ய வருவார் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
கோடீஸ்வர யோகம் தரும் மகாலக்ஷ்மியின் ஏலக்காய் மாலை வழிபாடு எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Best day to visit Tirupati. Tirupathi Perumal. Birth date palan. Tirupati palangal. Thirupathi sellum murai.

- Advertisement -