130 வருடங்களாக தொலைந்து போன கோவில் குளத்தை மீட்டெடுத்த மக்கள் – எங்கு தெரியுமா ?

kovil-kulam
- Advertisement -

130 வருடங்களுக்கு மேலாக ‘காணாமல்’ போயிருந்த ஒரு குளத்தை மிகவும் போராடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள் கரூர் மக்கள். ஆதிசிவன் கோயிலான வஞ்சுளேசுவரசுவாமி உடனுறை விசாலாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான பிரம்ம தீர்த்தக்குளம் தான் அது. கரூர் நகரத்தில் உழவர் சந்தைக்கு அருகில் உள்ள பிரம்ம தீர்த்த சாலைப் பகுதியில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு எதிரே, தனியார் ஆக்கிரமிப்பில் மண் மூடிக் கிடந்தது இந்தக் குளம்.

kovil kulam

அதை மீட்டு, புதிதாக வெட்டி, செப்பனிட்டு அந்த பிரம்ம தீர்த்த குளத்திற்கு தீர்த்த சம்மேளன நிகழ்ச்சியும் நடத்தியிருக்கிறார்கள். 130 வருடங்களுக்கு மேலாக நடக்காமல் இருந்த, காசிக்கு இணையான புனிதத்தன்மையைக் கொண்ட இந்தக் குளத்தில் தீர்த்த சம்மேளனம் நடந்ததால், பெருந்திரளாக பக்தர்கள் வந்து நீராடி  இறைவனை வணங்கிச் செல்கிறார்கள்.

- Advertisement -

வஞ்சுளேசுவரசுவாமி திருக்கோயிலும், அதற்கு எதிரே இருந்த இந்த பிரம்ம தீர்த்தக் குளமும் ஆதிகாலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கரூர் பகுதியில் தோன்றிய முதல் சிவன் கோயில் இது என்பதை வைத்துப் பார்க்கும்போது, இதன் பழமை விளங்கும்.

kovil

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் பிணக்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, பிரம்மனுக்குத் திடீரென்று ‘தான்தான் பெரியவன்’ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தனது படைப்புத் தொழிலை விட்டுவிட்டு, அசட்டையாகத் தூங்கியிருக்கிறார்.

- Advertisement -

இந்த விஷயம் முக்காலமும் உணர்ந்த சிவபெருமானின் கவனத்துக்குப் போக, அவர் பிரம்மனிடம், ‘ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?, உன்னால் உயிர்களின் சுழற்சி தடைப்படுகிறது’ என்று கண்டித்தார். ஆனாலும்,பிரம்மனின் தூக்கம் கலையவில்லை. இதனால் உக்கிரமான சிவன், ‘நீ படைப்புத் தொழில் செய்ததாலேயே இறைநிலையில் வைத்து பூஜிக்கப்பட்டாய். ஆனால்,அந்தப் படைப்புத் தொழிலையே பரிகாசம் செய்ததால், இனி நீ அந்தத் தொழிலைப் பார்க்க முடியாது. இறை நிலையிலும் இனி மக்கள் உன்னை வைத்து பார்க்க மாட்டார்கள்’ என்று சாபம் கொடுத்தார்.

brahma

இதனால் துயரமடைந்த பிரம்மன், திருக்கயிலாயத்திற்குச் சென்று சிவபெருமானிடம், இழந்த படைப்புத் தொழிலை வழங்கும்படி மன்றாடினார்.  கோபம் குறைந்த சிவனும், ‘உன் கர்வம் அழியவே அப்படி செய்தேன். உன்மீதான சாபம் விலக, வஞ்சிவனம் என்று அழைக்கப்படும் கருவூர் என்னும் புண்ணியத்தலத்தை அடைந்து எம்மை வழிப்பட்டு, அங்கே ஒரு குளத்தை வெட்டி நீராடியபின் நீ இழந்த படைப்பாற்றலை பெறுவாயாக…’ என்று தான் விட்ட சாபம் நீங்க வழியும் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

உடனே கிளம்பிய பிரம்மனும் ஆம்பிராவதி நதி (இப்போது அமராவதி என்று அழைக்கப்படும் நதி)  சூழ்ந்த, வஞ்சி மரங்கள் நிறைந்த கரூரை அடைந்தார். சிறிதும் தாமதிக்காமல் ஆம்பிராவதி நதிக்கு வடக்கேயும்,ஸ்ரீ கல்யாணபசுபதீசுவர சுவாமி திருக்கோயிலுக்குத் தெற்கேயும் தனது பெயராலேயே ‘பிரம்மத் தீர்த்தம்’ என்ற திருக்குளத்தை உண்டாக்கி, அத்தீர்த்தக் குளத்தின் கரையில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்து, தனது செருக்கால் இழந்த படைப்புத் தொழிலைத் திரும்பவும் பெற்றார். அதனால், இந்தக் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும்;தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

lingam

‘இந்த பிரம்மத் தீர்த்தம் எப்படித் தொலைந்தது? எப்படி மீட்டார்கள்?… பிரம்ம தீர்த்த சம்மேளன நிகழ்ச்சி நடக்கக் காரணமாக இருந்த சிவனடியார் ஆறுமுகம், ஆயில் ரமேஷ் ஆகியோரிடம் பேசினோம்.




“இப்படி ஒரு தீர்த்தம் இந்தக் கோயிலில் இருந்தது என்று ஸ்தல வரலாறு சொன்னது. அதோடு, இந்தக் கோயில் இருக்கும் இந்தப் பகுதிக்கே பிரம்மத் தீர்த்த சாலை என்றுதான் பெயர். ஆனால், எங்களுக்கு விவரம் தெரிந்து இங்கே குளம் இருந்து பார்த்ததில்லை. நாங்கள் ஒரு கமிட்டி ஆரம்பித்து, தீர்த்தம் பற்றிய தகவல்களைத் தேட ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில்,  இந்தக் கோயிலுக்கு எதிரே வலது பக்கம் பிரம்ம தீர்த்தம் இருந்ததைக் கண்டுபிடித்தோம். ஆனால், அந்த இடத்தில் குளம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த இடம் தனி நபர்களின் பெயரில் பட்டாவாகியிருந்தது. அவர்களிடம் கேட்டபோது, ‘எங்க தாத்தா காலத்தில் இருந்து இருக்கும் இடம்… விட்டுத் தர முடியாது’ என்று சாதித்தார்கள்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

இப்படி நான்கு வருடம் இழுபறியிலேயே ஓடியன. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிவபெருமான் ஏதோ அற்புதம் நிகழ்த்த, அவர்களாகவே இந்த இடத்தை விட்டுத்தர சம்மதித்தார்கள். உடனடியாக வேலையை ஆரம்பித்தோம். தொடங்கும்போது கையில் ஒரு பைசா இல்லை. வேலை தொடங்கியதும் எங்கெங்கோ இருந்து, யார்யாரோ வந்து நிதி கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த பிரம்மதீர்த்தக் குளத்தை மளமளவென வெட்டி, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரம்மதீர்த்த சம்மேளனம் நடத்தினோம். அன்று மட்டும் இருபதாயிரம் பேர் வரை புனித நீராடினார்கள். இனி எப்போதும் வருடம் முழுக்க இந்த பிரம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடலாம். 130 வருடங்களாக இல்லாமல் இருந்த புனித நீராடல் நிகழ்ச்சி இனி நடக்கும்…” என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள்!

- Advertisement -