ஆரோக்கியம் தரும் பீர்க்கங்காய் தோல் துவையல் செய்வது எப்படி?

perkangai-thuvaiyal
- Advertisement -

உடலுக்கு அதிகப்படியான ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணங்கள் நிரம்பிய பீர்க்கங்காய் தோல் துவையல் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த பீர்க்கங்காயில் தோலிலும் மருத்துவ குணம் ஏராளம். அதை துவையல் போல செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிக மிக நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. சரி நேரத்தைக் கடத்தாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பீர்க்கங்காய் தோல் துவையல் ரெசிபியை தெரிந்துகொள்வோமா?

peerkangaithol-chutney

முதலில் நீங்கள் வாங்கிய பீர்க்கங்காயில் இருந்து தோலை மட்டும் தனியாக சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாங்கிய பீர்க்கங்காய் ஆக இருந்தால், நிச்சயமாக அதன் மேல் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு இருக்கும். சீவிய பீர்க்கங்காய் தோலை உப்பு தண்ணீரில் ஒருமுறை நன்றாக கழுவி விட்டு அதன் பின்பு அதை பொடியாக நறுக்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யது, கொஞ்சம் சிறிய துண்டுகளாக வெட்டிய பீர்க்கங்காய் தோல் 2 கைப்பிடி அளவு நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்திருக்கும் பீர்க்கங்காய் தோலை கடாயில் போட்டு, 2 நிமிடம் போல வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 4, வரமிளகாய் – 3, கருவேப்பிலை – 1 கொத்து, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்களை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

peerkangaithol-chutney1

பருப்பு பொன்னிறமாக வரட்டும். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போட்டு, லேசாக வறுத்து விட்டு, இறுதியாக வதக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய் தோலையும் இதோடு சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவையை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த கலவையில் சூடு நன்றாக ஆறிய பின்பு, எல்லா பொருட்களையும் மொத்தமாக மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, தேவைப்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி துவையல் போல இதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். பீர்க்கங்காய் தோல் துவையல் தயார். இதை சுடச்சுட சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டும் சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம்தான். சாம்பார் சாதத்திற்கு ரசம் சாதத்திற்கு துவையல் போல தொட்டுக் கொள்ளலாம்.

peerkangaithol-chutney2

மிக்ஸி ஜாரில் இந்த துவையலை அரைப்பதை விட, அம்மிக்கல்லில் அரைத்து வைத்தால் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். சரி உங்கள் விருப்பம் போல மேலே சொன்ன அளவுகளில் உங்க வீட்டிலேயும் மிஸ் பண்ணாம இந்த ஆரோக்கியமான துவையல் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -