நிரந்தடிர வேலை, தொழில் அமைய செய்ய வேண்டிய பரிகாரம்

நாம் அனைவரும் வாழ்வதற்கு செல்வம் அல்லது பணம் அவசியம். பணம் நமக்கு கிடைக்க நாம் உழைக்க வேண்டும். அந்த உழைப்பு ஏதாவது ஒரு வேலை, தொழில் அல்லது வியாபாரம் போன்றவையாகவும் இருக்கலாம். ஆனால் சிலருக்கு மட்டும் எந்த ஒரு வேலை அல்லது தொழிலில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள். இவற்றிற்கான காரணங்களும், அதை நிவர்த்திக்கும் பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

navagragam

சில நபர்கள் எந்த ஒரு வேலை, வியாபாரம் மற்றும் தொழிலையும் நிரந்தரமாக செய்யாமல் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.அவர்கள் செய்யும் தொழில், வியாபாரம் மற்றும் வேலைகளில் பெரிய அளவு பொருள் வரவு இருக்காது. மேலும் சிலருக்கு அவர்களின் பாட்டனார், தந்தை போன்றவர்கள் சம்பாதித்த சொத்துக்கள் கிடைப்பதில் பல தடைகள் உருவாகும். வீட்டில் தந்தை – மகன், பங்காளி உறவுமுறைகளில் பிரச்சனைகள் ஏற்படும். இவை எல்லாமே ஜாதகத்தில் சில கிரகங்களின் பாதகமான கோச்சாரங்களினால் ஏற்படுகின்றன.

நிறைந்த வேலை, தொழில், வியாபாரம் போன்றவை அமைத்து நல்ல பொருள் வரவு கிடைக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் பூர்வீக சொத்துக்கள் உருவாக காரணமாக இருக்கும் கிரகங்களான “சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி” கிரகங்களுக்குரிய கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்டு வர வேண்டும். வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது நவகிரக சந்நிதியில், ஒன்பது கிரகங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது உங்களின் கிரக தோஷங்களை போக்கும். தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வந்தாலும் நன்மைகள் உண்டாகும்.

job

வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டாலே உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேற்கூறிய பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு வரும் வருமானத்தில், உங்களால் முடிந்த அளவு தொகையை சேமித்து, மாத இறுதியில் கோவில்களுக்கு சென்று அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் யாசகர்களுக்கு உணவு பொட்டலங்களை தானமாக வழங்கினால் உங்களின் தோஷங்கள் விலகி, நீங்கள் விரும்பிய விடயங்கள் நிறைவேற தொடங்கும்.

இதையும் படிக்கலாமே:
காதல் திருமணம் நடக்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Permanent job pariharam in Tamil or pariharam for permanent job in Tamil. It is also called as Pariharam for business in Tamil or Tolil sirakka pariharam or velaivaipu nirantharam adaiya pariharam in Tamil.