ஆபாச பட விவகாரம் – திருச்சியில் முதல் கைது

arrest

தமிழகத்தில் சில நாட்களாக அதிக பரபரப்பை ஏற்படுத்தி அதிகஅளவில் பேசப்பட்டு வரும் ஒரு விடயம் யாதெனில் ஆபாச வீடியோக்களை பார்க்கும் நபர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக போவதாகவும் மேலும் அந்த பட்டியலை போலீசார் தயார் செய்து வருவதாகவும் பட்டியல் தயாரானதும் ஒவ்வொருவராக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வெளியான செய்திதான்.

Arrest

போலிஸாரின் இந்த செய்தி வெளிவந்த பின் தமிழகம் முழுவதும் இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. போலீசார் உண்மையில் ஆபாச படங்களை பார்ப்பவர்களை கைது செய்யபோகிறார்களா ? எதன் அடைப்படையில் கைது இருக்கும்? யாரெல்லாம் கைதாவார்கள் என்ற கேள்விகள் பலரின் மத்தியில் எழுந்து வந்தது.

இந்நிலையில் அதன் துவக்கமாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் தமிழகத்தில் முதல் நபராக ஆபாச பட வழக்கில் கைதாகி உள்ளார். குழந்தைகள் ஆபாச வீடியோவை பகிர்ந்ததால் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்மீது தற்போது விசாரணை முடிவடைந்து கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றுள்ளது.

Arrest

திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததோடு மேலும் 150 பேருடன் அந்த விடீயோக்களை பகிர்ந்துள்ளார் என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் ஆபாச படங்களை பகிர்ந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு திருச்சி போலீசார் கைது செய்து அவரை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.